ஆலியா, தீபிகா வரிசையில்… ஷர்வரிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

மும்பை,

பாலிவுட் நடிகை ஷர்வரி தற்போது ‘மேயின் வாபஸ் ஆவுங்கா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் மாத 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் இம்தியாஸ் அலியை நடிகை ஷர்வரி பாராட்டி இருக்கிறார். அவரது படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் ஆழமும் தனித்துவமும் கொண்டதாக இருப்பதாக அவர் கூறினார்.

Also Read
கவனம் ஈர்க்கும் ‘டூன் 3’ படத்தின் டீசர்… திரைக்கு வருவது எப்போது?
ஆலியா, தீபிகா வரிசையில்... ஷர்வரிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

ஷர்வரி கூறுகையில், “இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஹீரோயினாக நடிப்பது என் கனவு. அவரது படங்களில் பெண்கள் கதாபாத்திரங்கள் கதையின் மையமாக இருக்கும். ஆலியா பட், தீபிகா படுகோனே, கரீனா கபூர், அனுஷ்கா சர்மா போன்ற முன்னணி நடிகைகளுடன் பணியாற்றிய அவர், என்னை இப்படத்திற்கு தேர்வு செய்தது மிகப்பெரிய அங்கீகாரம்” என்றார்.

Source link