காரைக்கால் அடுத்த அகர சேத்தூர் பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மகாலட்சுமி பூஜை எனப்படும் விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி மாத முதலாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீமகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.
ஆடி மாத முதலாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற மகாலட்சுமி பூஜை எனப்படும் திருவிளக்கு பூஜையில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கை அம்மனாக பாவித்து விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். மேலும் இந்த விளக்கு பூஜையை கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
