செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேண்டவராசி அம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை வேண்டவராசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இரவு திருவிளக்கு பூஜை தொடங்கியது. இந்த திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து வேண்டாவராசி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
