திருவண்ணாமலை: அமைச்சரின் காரை முற்றுகையிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்… என்ன கோரிக்கை? – tvk minister adhav arjuna car surrounded by auto drivers tiruvannamalai

திருவண்ணாமலையில் பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் இயக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி அருகே அமைச்சரின் காரை முற்றுகையிட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு. ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோடை விழா இன்றும் நாளையும் விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவு அரசு சுற்றுலா மாளிகையில் வருகை தந்தார். தொடர்ந்து இன்று காலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் விடுதி மாணவ மாணவிகளுடன் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

ஜவ்வாது மலை கோடை விழா

முன்னதாக மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சரை ஆட்சியர் வந்தனாக்க பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் 10 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஹாக்கி செயற்கை இழை விளையாட்டு மைதானத்தை இன்று விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் ஹாக்கி விளையாடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?

உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும்

அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு சென்ற அவர் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியதுடன் உலகமே உற்று நோக்கும் FIFA கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என ஆருடம் கணித்தார். முன்னதாக விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடி அவர் முறையான சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா? என்றும், பிரட் பால் பழ வகைகள் உள்ளிட்டவைகள் முறையாக வழங்குகிறார்களா என்றும் அவர்களிடம் கேட்டறிந்த குறைகள் ஏதேனும் இருந்தால் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் உடனடியாக அவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என மாணவர்களுக்கு அவர் உறுதியளித்தார்.

பேருந்து நிலையத்தை மீண்டும் இயக்க கோரிக்கை

பார்க்க வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலரும் சால்வையும் அணிவித்த நிலையில் சால்வை அவரும் அணிவிக்க வேண்டாம் அதற்கு பதிலாக புத்தகம் கொடுத்தால் இங்கேயே நூலகம் துவக்கி விடுவேன் என்றும் கூறினார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சர் கோடை விழாவிற்காக திருவண்ணாமலை அடுத்த இனாம் காரியங்கள் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பேருந்து நிலையத்தில் மீண்டும் குறிப்பிட்ட பேருந்துகளை இயக்கி தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

அமைச்சரின் காரை முற்றுகையிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

என 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கோடை விழாவிற்காக புறப்பட்டு சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Source link