சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா, 2012 முதல் 2025ஆம் ஆண்டுவரை, அணியின் முக்கிய வீரராக இருந்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த சீசனுக்கு முன் சஞ்சு சாம்சனை, ராஜஸ்தான் ராயல்ஸிடம் இருந்து வாங்குவதற்காக, ரவீந்திர ஜடேஜாவை, ஆர்ஆர் அணிக்கு சிஎஸ்கே அனுப்பி வைத்தது. சிஎஸ்கேவில் இருந்த வரை, ஸ்டார் வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸில், இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
இந்திய அணி வாய்ப்பும் இல்லை: ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சென்ற நிலையில், இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர், அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், இரண்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மாற்று வீரராக கூட, வாய்ப்பில்லை: இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டதால், மூன்றாவது போட்டியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, மாற்றாக இடது வீரரான ஹர்ஷ் துபேவை சேர்த்துள்ளனர். ஹர்ஷ் துபே, ஒரு இடது கை ஸ்பின்னர் மற்றும் லோவர் மிடில் வரிசை பேட்டராக இருக்கிறார். அதாவது, ஜடேஜாவை போல செயல்படக் கூடிய வீரராக இருக்கிறார்.
யாருமே பேசவில்லையை? இந்நிலையில், ஜடேஜாவுக்கு வாய்ப்பு ஒடுக்காமல், மாற்றாக இளம் ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜடேஜாவை ஏன் புறக்கணித்தீர்கள் என இதுவரை யாருமே கேள்வி எழுப்பவில்லையே என ரசிகர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஜடேஜாவுக்கு 37 வயதானாலும், தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பீல்டர்களைவிட ஜடேஜாவால் அபாரமாக பீல்டிங் செய்ய முடியும். மேலும், ஓவர்களை விரைவாக முடித்து, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி தருகிறார். பேட்டிங்கிலும், ஓரளவுக்கு அதிரடியாக விளையாட முடியும். அப்படியிருந்தும், ஜடேஜாவை புறக்கணிப்பது சரியான என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரவீந்திர ஜடேஜா, இதுவரை 210 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 142 இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி, 32.28 சராசரி வைத்திருக்கிறார். ஒரு போட்டியில், அதிகபட்சமாக 87 ரன்களை அடிக்க முடிந்தது. 13 அரை சதங்களை எடுத்துள்ளார். 202 ஒருநாள் போட்டிகளில் பந்துவீசி, அதில் 4.89 என்ற சிறந்த எகனாமியில் 232 விக்கெட்களை டுத்துள்ளார். 7 முறை 4 விக்கெட்களையும், 2 முறை 5 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
சிஎஸ்கே ரசிகர்கள் ஆதங்கம்: ஜடேஜா மட்டும் இந்நேரம் சிஎஸ்கேவில் நீடித்திருந்தால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதிக்கு, நிச்சயம் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்போம். ஜடேஜாவை, சைலண்டாக ஓடங்கட்டியது குறித்து, இதுவரை ஏன் யாரும் பேசவில்லை? ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களும் இதுகுறித்து பெரிய அளவில், எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது, இந்திய ஒருநாள் அணியில், ஜடேஜா இடத்தை ஹர்ஷ் துபேவுக்கு கொடுத்துவிட்டதால், ஜடேஜா விரைவில், இந்திய அணியில் இருந்து முழுவதுமாக ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளது. ஜடேஜாவுக்கு இருக்கும் பிட்ஸுக்கு, அவரால் இன்னமும் 4-5 ஐபிஎல் சீசன்களில் விளையாட முடியும் எனக் கருதப்படுகிறது.
