ஐபிஎல் 2026 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி முடித்தப் பிறகு பேட்டிகொடுத்த, அந்த அணி பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட், ‘‘ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி, எங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை’’ என, வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியை பறித்து, வேறு ஒருவருக்கு கேப்டன் பதவியை கொடுக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்ததால், அதிருப்தியடைந்த ஹர்திக் பாண்டியா, என்னை டிரேடிங்கில் அனுப்பிவிடுங்கள் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், டிரேடிங் பேச்சு வார்த்தையை துவங்கியது. ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தால், 12 வீரர்களுடன் விளையாடுவதற்கு சமம் என்பதால், பல அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்க போட்ட போட்டன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுடன்தான் பேச்சு வார்த்தையை நடத்தியது.
சிஎஸ்கேவிடம் ஆயுஷ் மாத்ரேவை கேட்ட நிலையில், சிஎஸ்கே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், கேகேஆர் அணியிடம், பேச்சு வார்த்தையை நடத்தினார்கள். அப்போது, ஹர்ஷித் ராணாவுடன் வருண் சக்ரவர்த்தியை விடுவிக்க கேகேஆர் அணி நிர்வாகம் முன் வந்த நிலையில், இதற்கு மும்பை இந்தியன்ஸும் கிரீன் சிக்னல் காட்டியது.
இந்நிலையில், சமீபத்தில் மும்பை இந்தியன்ஸை தொடர்புகொண்ட ஹர்திக் பாண்டியா, ‘தன்னை டிரேடிங்கில் அனுப்பினால், சிஎஸ்கேவுக்கு அனுப்புங்கள். இல்லையென்றால், ஏலத்திற்கு அனுப்புங்கள்’ என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதனால், கேகேஆர் அணியுடன் பேசுவதை, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிறுத்திக் கொண்டது. ஹர்திக்கிடம் தோனி பேசியப் பிறகுதான், ஹர்திக் சிஎஸ்கே செல்லும் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பேச்சு வார்த்தை நடத்திய சிஎஸ்கே நிர்வாகம்: இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை அழைத்து, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
அப்போது பேசிய ஹர்திக் பாண்டியா, ‘‘எனக்கு மும்பை இந்தியன்ஸில் நீடிக்க விருப்பம் இருக்கிறது. அனைத்து வீரர்களும் சொதப்பிய நிலையில், என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது, முழு பழியையும் என் மீது போடுவதற்கு சமம். மும்பை இந்தியன்ஸில் நீடிக்க வேண்டும் என்றால், எனக்கு கேப்டன் பதவி வேண்டும். ஒருவேளை, டிரேடிங்கில் அனுப்பினால், எனது விருப்பபடி சிஎஸ்கேவுக்கு அனுப்புங்கள். முடியவில்லை என்றால், ஏலத்திற்கு அனுப்புங்கள்’’ என ஹர்திக் உறுதியாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஹர்திக்கின் இந்த கோரிக்கைகளில், ஒன்றை கூட நிறைவேற்ற முடியாது என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். டிரேடிங்கில், சிஎஸ்கேவுக்கு அனுப்புவது அனுப்பாதது எங்கள் இஷ்டம். மற்ற அணிகள், சிறந்த வீரர்களை கொடுக்க முன் வந்தால், அங்குதான் உங்களை அனுப்புவோம். மேலும், மும்பை இந்தியன்ஸில், நீடிக்க விரும்பினாலும், இங்கேயே இருக்கலாம். ஆனால், கேப்டன் பதவியை கொடுக்க முடியாது என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், மும்பை இந்தியன்ஸை தொடர்புகொண்டு, ஹர்திக் பாண்டியாவை பணம் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். மாற்றாக ஒரு வீரரை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். ஆனால், இதற்கு மும்பை இந்தியன்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை. மாற்றாக, ஆயுஷ் மாத்ரே வேண்டும் என அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
