நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது
தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?
இந்திய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஒரு ஆண்டில் மூன்று கூட்டத்தொடர்கள் நடத்தப்படும். அது பட்ஜெட் கூட்டத்தொடர் .
நாடாளுமன்ற கூட்டத்தொடர் எத்தனை?
இதுதான் ஆண்டின் முதல் கூட்டத்தொடர். வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டிற்கான (2026) பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 முதல் ஏப்ரல் 18 வரை நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடர் இது ஆண்டின் இரண்டாவது கூட்டத்தொடர். இந்த கூட்டத்தொடரானது நாளை தொடங்க உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் .இது ஆண்டின் மூன்றாவது மற்றும் இறுதி கூட்டத்தொடர். இது பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) முறைப்படி தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந்தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தொடர், வழக்கம்போலவே பல்வேறு அரசியல் விவாதங்களுக்கும் காரசாரமான விவாதங்களுக்கும் களம் அமைக்கப் போகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, சபையை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க ஆளுங்கட்சித் தரப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்
தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?
எதிர்க்கட்சிகளின் கைகளில் சிக்கிய முக்கிய ஆயுதங்கள்
பொதுவாக, இதுபோன்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் அரசு தரப்பில் மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு கோருவதற்காகவே நடத்தப்படும். ஆனால், இந்த முறை எதிர்க்கட்சிகளின் கைகளில் ஆளுங்கட்சியைத் திணறடிப்பதற்கான பலமான ஆயுதங்கள் பல சிக்கியுள்ளன. இதனால், இன்றைய கூட்டமே வழக்கமான சம்பிரதாயக் கூட்டமாக இல்லாமல், ஆரம்பத்திலேயே அனல் பறக்கும் ஒன்றாக மாறும் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
நாடாளுமன்றத்தை முடக்கத் திட்டமிடும் எதிர்க்கட்சிகள்
குறிப்பாக, லடாக் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை இன்றைய கூட்டத்தில் மிக முக்கியப் பிரச்சினையாகக் கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. ஜனநாயக ரீதியில் போராடுபவர்கள் மீதான இந்த நடவடிக்கை கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ஆளுங்கட்சியின் வியூகம் என்ன?
இதுமட்டுமன்றி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கான நன்கொடைகளில் பெரும் கையாடல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அண்மைக்காலமாக எழுந்துள்ள புகார்களும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகம் மற்றும் மக்களின் உணர்வுகள் சார்ந்த இந்த விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இவற்றுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் சார்ந்த அன்றாடப் பிரச்சினைகளையும் எழுப்ப அவர்கள் தயாராகி வருகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், நாளை தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடர், மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசும் ஒரு தளமாக அமையுமா அல்லது அரசியல் மோதல்களிலேயே முடியுமா என்பதை இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போக்கே தீர்மானிக்கும்.
