தேசிய விருதுகள் 2026 பட்டியல்: 72வது தேசிய விருதுகள் ஜூலை 19ம் தேதி அறிவிக்கப்பட்டது. 2024ம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினமாவுக்கு நிறைய விருதுகள் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
சிறந்த படம்- ஆர்டிகிள் 370
சிறந்த நடிகர்- மம்மூட்டி(பிரம்மயுகம்), கார்த்திக் ஆர்யன்(சந்து சாம்பியன்)
சிறந்த நடிகை- யாமி கவுதம் (ஆர்டிகிள் 370)
சிறந்த துணை நடிகர்- சஞ்சய் மிஸ்ரா (பக்ஷக்)
சிறந்த துணை நடிகை- ரூபஸ்ரீ வர்காடி(மித்யா), சாச்சனா நமிதாஸ்(மகாராஜா)
சிறந்த பொழுதுபோக்கு படம்- கல்கி
சமூக மற்றும் தேசிய நலனை ஊக்குவிக்கும் சிறந்த படம்- கேப்டன் மில்லர்
சிறந்த இயக்குநர்- ராஜ்குமார் பெரியசாமி(அமரன்)
சிறந்த இசை (பாடல்கள்): சாஷ்வத் சச்தேவ் (ஆர்டிகிள் 370)
சிறந்த இசை (பின்னணி இசை): ஜி.வி. பிரகாஷ் (அமரன்)
சிறந்த பின்னணி பாடகர்- அபய் ஜோத்புர்கர்(கராத் கணபதி)
சிறந்த பின்னணி பாடகி- வைக்கம் விஜயலட்சுமி(ஏ.ஆர்.எம்)
சிறந்த ஒளிப்பதிவு: ஷெஹ்னாத் ஜலால் (பிரம்மயுகம்)
சிறந்த திரைக்கதை: சுகுமார் (புஷ்பா 2)
சிறந்த படத்தொகுப்பு : ஆர். கலைவாணன்(அமரன்)
சிறந்த நடன அமைப்பு: விஜய் கங்குலி (ஸ்திரீ 2)
சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா)
சிறந்த தமிழ் படம்- ராயன்
சிறப்பு மென்ஷன்- தனுஷ்(கேப்டன் மில்லர்)
சிறந்த தெலுங்கு படம்: கமிட்டி குர்ரோலு
சிறந்த மலையாள திரைப்படம்: பெமினிச்சி பாத்திமா
சிறந்த இந்தி திரைப்படம்: ஸ்ரீகாந்த்
சிறந்த கன்னட திரைப்படம்: மித்யா
சிறந்த மராத்தி திரைப்படம்: முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி
சிறந்த பெங்காலி திரைப்படம்: சலச்சித்ர எகோன்
விக்ரமுக்கு இல்லையா?: கோலிவுட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விருதுகள் கிடைத்துள்ளபோதிலும் தங்கலானுக்காக சீயான் விக்ரமுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிறந்த காஸ்டியூம் விருது கல்கி படத்திற்கு அல்லாமல் புஷ்பா 2 படத்திற்கு கொடுத்ததையும் கேள்வி கேட்கிறார்கள். இதற்கிடையே ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை வைத்து மீம்ஸ் போட்டு கிண்டல் செய்கிறார்கள்.
தனுஷ் ஹேப்பி: இந்நிலையில் ஒரு இயக்குநராக முதல் முறையாக தேசிய விருது கிடைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் தனுஷ். அவர் இயக்கி, ஹீரோவாக நடித்த ராயன் சிறந்த தமிழ் படமாக தேர்வாகியிருப்பதால் விரைவில் இந்தியில் ரீமேக் செய்து அங்கும் ஒரு விருது வாங்கிவிடுவார்கள் என்று ரசிகர்கள் பேசுகிறார்கள். விருதுகள் கிடைத்திருப்பதை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து எக்ஸ் தளத்தில் பாராட்டியிருப்பதுடன், வாழ்த்தியிருக்கிறார்.
வைரமுத்து வாழ்த்து: மம்மூட்டி, இரண்டு விருது பெற்றிருக்கும் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு,நடிகை சாச்சனா, பாடகி வைக்கம் விஜயலட்சுமி, ஒலிக்கலவை சுரேன், படத் தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் ஆகியோரை வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார் . ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு அதிக தேசிய விருதுகள் கிடைக்க வேண்டும் என்பது சுயநலம் கிடையாது. அது சொந்தங்கள் மீது உள்ள பாசம் என்கிறார் வைரமுத்து.
சாச்சனாவுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ, அடேங்கப்பா நம்ம விஜய் சேதுபதியின் ரீல் மகளுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே. வாழ்த்துக்கள் சாச்சனா என்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
