நான் முதல்வரானால் விஜய் செய்தது மாதிரி செய்ய மாட்டேன், அது மோசம்: தியான் சீனிவாசன்

தியான் பேச்சு: நடிகரும், இயக்குநருமான தியான் சீனிவாசன் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். கேரளா முதல்வரான பிறகு தியான் சீனிவாசன் என்ன செய்வார் என்று அந்த விழாவை தொகுத்து வழங்கியவர் கேட்டார். நான் நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக காத்துக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகே சி. எம். ஆவேன்.

முதலில் தலைவர், அந்த பதவி கிடைத்து 13 ஆண்டுகள் கழித்து முதல்வர். ஜோசப் விஜய் எனும் நான் என்பது போன்று நானும் சொல்வேன் என்று சொல்ல அரங்கில் இருந்தவர்கள் சிரித்தார்கள். அதை கேட்டு தியான் சீனிவாசனும் சிரித்தார். ஆனால் அதை பார்த்து விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து தியானை திட்டுகிறார்கள். ஜோசப் விஜய் சிறைக்கைதிகளுக்கு கஞ்சியும், பள்ளிக் குழந்தைகளுக்கு ச்ததான உணவும் கொடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். அவர் ஒரு டிரெண்டை உருவாக்கியிருக்கிறார்.

விஜய் மோசம்: நீங்கள் கேரளா முதல்வரானதும் செய்யும் முதல் காரியம் என்னவென்பதை கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு தியான் சீனிவாசனோ, அவர் செய்ததை நான் செய்ய மாட்டேன். அது ரொம்ப மோசம் என்றார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரை ஒரு சாதாரண நடிகர் எப்படி இந்த அளவுக்கு கலாய்க்கலாம் என்று விஜய் ரசிகர்கள் விளாசுகிறார்கள். உங்களுக்கு அழிவு காலம் வந்துவிட்டது. வாழ்க்கையில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்காத தியான் சீனிவாசன் எல்லாம் கெரியரின் உச்சத்தில் சினிமாவை விட்டுவிட்டு வந்த விஜய்ணாவை கிண்டல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நவ்யா, கண்ணீர், சேலை: சினிமா விருது விழாவில் தியானிடம் முதல்வர் பதவி குறித்து கேள்வி கேட்க முக்கிய காரணம் இருக்கிறது. முன்னதாக நடந்த விசிட்டர் பட பூஜையில் கலந்து கொண்ட தியான் சீனிவாசனோ, நான் கேரள முதல் மந்தரியாக பதவியேற்கும்போது நடிகை நவ்யா நாயர் பட்டுச்சேலையில் வந்து முதல் வரிசையில் அமர வேண்டும். நான் பதவியேற்பதை பார்த்து கை தட்டுவதுடன், ஆனந்தத்தில் கண் கலங்குவதை நான் பார்க்கணும் என்றார்.

த்ரிஷா செய்தது: தளபதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற நாளில் நேரு உள்விளையாட்டரங்கின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் த்ரிஷா கிருஷ்ணன். பட்டுச்சேலையில் வந்த அவர், விஜய் பதவியேற்றபோது அதை பார்த்து கண்கலங்கினார். அதை தான் தியான் சீனிவாசன் அப்படி நக்கலாக பேசியதாக விமர்சிக்கிறார்கள் தளபதியன்ஸ்.

அஜு திட்டம்: அது மட்டும் அல்ல விஜய் முதல்வரானதும் நண்பன் அஜு வர்கீஸ் தனக்கு போன் போட்டு நீ கேரளா முதல்வராகணும் என்றார் என தெரிவித்தார் தியான். நேராக முதல்வர் வேண்டாம், முதலில் அம்மா தலைவர், அப்புறம் முதல்வர் என்று அஜு கூறினார்.

அம்மா தலைவரானதும் 15 ஆண்டுகள் நல்லது செய்ய வேண்டும், மக்களை ஏமாற்ற. விஜய் செய்தது மாதிரி என அஜு கூறியதாக பேசினார் தியான். அதன் பிறகு மேடைக்கு வந்த நடிகர் அஜு வர்கீஸோ, என் நண்பன் பைத்தியம் சி.எம். விஜய் சார். மன்னித்துக்கொள்ளவும் என்று தெரிவித்தார் . இதையடுத்தே தியான் சீனிவாசன் யார், என்னென்ன படங்களில் நடித்திருக்கிறார், இயக்கியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள கோலிவுட் ரசிகர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள்.

Source link