தமிழ் திரைப்படங்கள் 9 விருதுகளை வென்று அசத்தல்
2024 – ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் திரைப்படங்கள் 9 விருதுகளை வென்று அசத்தியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்துக்கு 3 விருதுகளும், விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்துக்கு 2 விருதுகளும், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு 2 விருதுகளும், மெய்யழகன் திரைப்படத்துக்கு ஒரு விருதும், ராயன் திரைப்படத்துக்கு ஒரு விருதும் என மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர, “Blue” என்கிற தமிழ் ஆவணப்படமும் தேசிய விருதை வென்றுள்ளது.
நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி”
நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சேத்தன் டி.கே.இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சாகர் பி.ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருத்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வரும் 24-ம் தேதி வெளியாகிறது.
நடிகர் சூர்யா நடித்துள்ள “சூர்யா 47” படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சூர்யா நடித்துள்ள “சூர்யா 47” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 47” என பெயிரிடப்பட்டுள்ளது.
படத்தில், நஸ்ரியா நசிம், அஸ்லென் கே.கஃபூர், ஜான் விஜய், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சூழலில், ழகரம் தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சூர்யா47” படப்பிடிப்பு நிறைவு என குறிப்பிட்டு “தி ஒன்” சூர்யாவுடன் திரையரங்குகளில் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளது.
