கோவை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது

கோவை,

கோவையில் ஆண் நண்பருடன் நின்ற போது விசாரிப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் வினோத்குமார் (வயது 35) மற்றும் போலீசார் கடந்த 15-ந் தேதி வெள்ளக் கிணறு பகுதியில் வீட்டுவசதி வாரிய 2-ம் கட்ட வளைவு அருகே ரோந்து சென்றனர். அங்கு 23 வயது இளம்பெண், தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டு இருந்தனர்.

உடனே போலீசார் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ்காரர் வினோத்குமார், அந்த இளம்பெண்ணை தனியாக அழைத் துச்சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு அவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் ஓடிச்சென்று தனக்கு நடந்ததை கூறி அழுதார். இது தொடர்பாக அந்த இளம்பெண்ணின் ஆண் நண்பர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீஸ்காரர் வினோத்குமார் மீது துடியலூர் போலீஸ் நிலை யத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று போலீஸ்காரர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது. சம்பவம் நடந்த அன்று போலீஸ்காரர் வினோத்குமாருடன் ரோந்து சென்ற போலீசார் மீதும் துறைரீதியான நடவ டிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

Source link