ஒரே நேரத்தில் 2 தேசிய விருது: எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்லும் தனுஷ் – winning my first national award as a director for raayan is a blessing: dhanush

தனுஷுக்கு விருது: 72வது தேசிய விருதுகள் எப்பொழுது அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்று அறிவிப்பு வெளியானது. அதில் தமிழ் சினிமாவுக்கு பெயருக்கு கொடுக்காமல் நிறைய விருதுகள் கொடுத்திருப்பது ரசிகர்களை சந்தோஷப்பட வைத்தாலும் சில படங்களுக்கும், நடிகர்களுக்கும் கிடைக்காதது வருத்தம் அடைய செய்திருக்கிறது.

விருது விழா என்று ஒன்று நடந்தால் அதில் தனுஷுக்கு ஒரு விருதாவது நிச்சயம் கிடைக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் நடந்துவிடும். இந்நிலையில் தான் தனுஷுக்கு ஒரே சமயத்தில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கேப்டன் மில்லர் படத்திற்காக ஒரு சிறப்பு விருதும், ராயன் படத்திற்காக ஒரு விருதும் கிடைத்திருக்கிறது. தம்பிகள், தங்கை பாசத்தை மையமாக வைத்து தனுஷ் இயக்கி, நடித்து வெளியிட்ட ராயன் தான் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கிறது.

இதன் மூலம் நடிப்புக்காக மூன்று தேசிய விருதுகளும், இயக்கத்திற்காக ஒரு தேசிய விருதும் வென்றவராகிவிட்டார் தனுஷ். இயக்குநராக அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை ஆகும். அதை பார்த்த தனுஷ் ரசிகர்களோ அவரை வாழ்த்தியிருப்பதுடன் அடுத்ததாக இட்லி கடைக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதும் கிடைக்கும் என்கிறார்கள்.

தனுஷ் அறிக்கை: இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஓம் நமச்சிவாய. ராயன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெறுபவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய விருதுகள் ஜுரி மற்றும் செலக்ஷன் கமிட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் கெரியரில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மீடியா, சோஷியல் மீடியா ஆட்களுக்கு நன்றி.
ஒரு நடிகராக இது எனக்கு மூன்றாவது தேசிய விருது ஆகும். இயக்குநராக முதல் முறை தேசிய விருது வந்திருக்கிறது. என் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை நடித்த படங்களிலேயே கேப்டன் மில்லரில் நான் சிறந்த நடிப்பை வெளிப்படுதியதாக நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது கேப்டன் மில்லருக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது என் இதயத்திற்கு நெருக்கமானது.

முதலாவது எப்பொழுதமே மறக்க முடியாதது. ராயனுக்காக ஒரு இயக்குநராக தேசிய விருது பெறுபவதை என்றும் கொண்டாடுவேன். நான் எப்பொழுதும் சொல்வது போன்று எண்ணம் போல் வாழ்க்கை. ஹர் ஹர் மகாதேவ் என தெரிவித்துள்ளார்.
கமல் மகிழ்ச்சி: இந்நிலையில் தங்கலான் படத்தில் உயிரை கொடுத்து நடித்த சீயான் விக்ரமுக்கு அல்லவா சிறந்த நடிருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். ஜுரி ஆட்கள் என்ன இப்படி ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். எப்பேர்பட்ட நடிகர் மம்மூட்டி, அவருடன் சேர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை கார்த்திக் ஆர்யனுக்கு போய் கொடுத்திருக்கிறார்களே. தேசிய விருது மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர் மல்லுவுட் ரசிகர்கள். ஆடுஜீவிதம் ப்ரித்விராஜுக்கு விருது கிடைக்காதது பெரும் ஏமாற்றம் என பலரும் குமுறுகிறார்கள்.
இதற்கிடையே தான் தயாரித்த அமரன் படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகள் கிடைத்த சந்தோஷத்தில் வாழ்த்தி ட்வீட் போட்டிருக்கிறார் விண்வெளி நாயகன் கமல் ஹாசன்.

Source link