நிவின் பாலியின் “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ரிலீஸ் அப்டேட்

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதியை நாளை மாலை அறிவிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். இவர் ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நிவின் பாலியை வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்பட்டது. இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும். ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது. தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வானது.

இந்நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதியை நாளை (ஜூலை 20) மாலை 6.33 மணிக்கு அறிவிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.



Source link