ஜனநாயகன் டிக்கெட் விற்பனை: உங்கள் முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனை ஜூலை 23ம் தேதி முதல் தியேட்டர்களில் பார்க்கலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததில் இருந்து தளபதி ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூரில் எல்லாம் ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி அதாவது 6 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டது. ஜனநாயகன் டிக்கெட்டை ரூ. 1,600, ரூ. 1000, ரூ. 800க்கு விற்றபோதிலும் ரசிகர்கள் வாங்கிவிட்டார்கள்.
நண்பன் ஸ்ரீநாத்: ஜனநாயகன் படத்தில் முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் தன் கதாபாத்திரம் குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார். ஹெச். வினோத்தின் படத்தில் விஜய்யின் நண்பன் அதுவும் முஸ்லீம் நண்பனாக நடித்திருப்பதாக கூறியிருக்கிறார் ஸ்ரீநாத். அவர் மேலும் கூறியதாவது, நண்பனுக்காக எதையும் செய்யும் ஆளாக நடித்துள்ளேன். தேவைப்பட்டால் நட்புக்காக உயிரையும் கொடுக்கும் கதாபாத்திரம். அப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது என்றார்.
நிஜத்திலும் நண்பன் விஜய்க்காக எதையும் செய்யும் ஆள் தான் ஸ்ரீநாத். அதனால் அவரின் நிஜ குணத்தையே கதாபாத்திரமாக வைத்து நடிக்க வைத்த வினோத்தை பாராட்டாமல் இருக்க முடியாது தானே?. முன்னதாக அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது தளபதியின் நண்பனாக பிறப்பது அரிது என்று ஸ்ரீநாத் தெரிவித்ததை கேட்டு விஜய் ரசிகர்கள் அப்படியொரு சந்தோஷப்பட்டார்கள்.
ஔவையார் பாடலை தளபதி விஜய்க்காக என்ன அழகாக மாற்றியிருக்கிறார் நம் அமைச்சர் என்று விஜய் ரசிகர்கள் பெருமைப்பட்டார்கள். அதற்கும் முன்பு தன்னை வேட்பாளராக விஜய் அறிவித்ததும் அவரின் கன்னத்தில் முத்தமிட்டு, பதிலுக்கு கேட்டு ஒரு முத்தம் வாங்கினார் ஸ்ரீநாத். மேலும் கட்சி துண்டை விஜய் கழுத்தில் போட்டு அவர் கழுத்தில் இருந்த துண்டை தன் கழுத்தில் போடச் செய்த வீடியோவை தளபதி ரசிகர்கள் ரிப்பீட் மோடில் போட்டு பார்த்து ரசித்தார்கள்.
தியேட்டர்கள் கவனம்: ஜனநாயகன் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் டிக்கெட் விலையை எந்த காரணத்திற்காகவும் உயர்த்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். விஜய் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பாதல் 18 வயதுக்குட்பட்ட யாரையும் ஜனநாயகனை பார்க்க அனுமதிக்கக் கூடாது என தியேட்டர் உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
குட்டீஸ் யாராவது ஜனநாயகன் படத்தை தியேட்டரில் பார்த்து அந்த வீடியோ வெளியே வந்தால், முதல்வர் விஜய்யின் படம் ஓடும் இடத்தில் அத்துமீறல் என பேச்சு கிளம்பிவிடும். அது போன்று எதுவும் நடந்துவிடாமல் இருக்க கவனமாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இன்னும் 4 நாளில் அதாவது சரியாக ஜூலை 23ம் தேதி எனக்கு காய்ச்சல் வரும், தலைவலி வரும், பாட்டி இறந்துவிடுவார் என்று சொல்லி லீவு போட தளபதியன்ஸ் தற்போதே தயாராகிவிட்டார்கள். விஜய்ணாவை கடைசியாக ஒரு முறை பார்க்க பொய் சொல்லி லீவு போடுவதில் தவறே இல்லை என்கிறார்கள் அவர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திரையுலகில் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கும் பிரபலங்களையும் ஜூலை 23ம் தேதி தியேட்டர்களில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நான் கேரளா முதல்வரானால் விஜய் செய்தது போன்று செய்யப் போவது இல்லை. அவர் செய்தது மோசம் என நடிகர் தியான் சீனிவாசன் பேசிய வீடியோ ஒரு பக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
