சென்னையில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்ஹித்து பேசுகையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதிக்கப்பட்டால் சென்னை முழுவதும் ஆண்டுதோறும் கடுமையான வெள்ள பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது டி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியதை நினைவுபடுத்திய அவர்கள், இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க சதுப்புநிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் விவகாரம்
கடந்த 2003-ம் ஆண்டு முதல் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தனர். சமீபத்தில் இந்த பகுதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் (Ramsar) சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 2,700 முதல் 3,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பகுதியை பாதுகாக்க இந்தியா சர்வதேச அளவில் உறுதி அளித்திருப்பதாகவும் கூறினர்.
திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி
மேலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை விட பல மடங்கு அதிக அளவில் வலசைப் பறவைகள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு வருவதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 20-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் மற்றும் பல அரிய உயிரினங்கள் இங்கு வாழ்வதாகவும் தெரிவித்ததார்.
சென்னையில் சதுப்புநிலங்கள் அழிப்பு
சமீபத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், சதுப்புநிலத்தின் எல்லைகளை அறிவியல் அடிப்படையில் தெளிவாக வரையறுத்து, நீரியல் (Hydrology) மற்றும் சுற்றுச்சூழல் (Ecology) ஆய்வுகளின் அடிப்படையில் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளிக்கரணை சதுப்பு நீளம் சென்னையை சுற்றி சுமார் 250 வடிகால்களாக பயன்படுத்தப்படுகிறது. சென்னையை சுற்றி இருபதற்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி, புலழ் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு ஏரி என அனைத்து ஏரிகளுக்கும் வடிகால்களாக பயன்படுத்தப்படுகிறது இது ஒரு மிகப்பெரிய ஈகோ சிஸ்டம் இதை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். தவிர்க்கக்கூடாது. இதற்கு தமிழக அரசு குறிப்பாக முதலமைச்சர் விஜய் பள்ளிக்கரணை சதுப்பு நில பிரச்சனையில் தலையிட்டு இதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி எச்சரிக்கை
மேலும் தமிழ்நாடு வெர்த் லேட் அமைப்பு தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிறது .இந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இதுவரை ஒரே ஒரு சதுப்பு நிலத்தை கூட அறிவிக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்கள் உள்ளது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 5 ஏக்கருக்கு மேல் உள்ள ஈர நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை வரையறுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஐந்தாண்டுகள் ஆகிறது இதுவரைக்கும் ஒன்று கூட தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை.
ஏன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கவில்லை. வேண்டுமென்று அறிவிக்காததற்கு காரணம் அங்கு கட்டுமானங்களை தொடங்கலாம் என்பதற்காக தான். இதில் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது சென்னையை பொறுத்தவரை சுமார் 200க்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்களை அழித்துவிட்டனர். கண்டிப்பாக முகப்பேர் ஏரி திட்டம் நேரு ஸ்டேடியத்தை ஏரியில் கட்டியது.வள்ளுவர் கோட்டத்தை ஏரியில் கட்டினார்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஏரியில் கட்டினார்கள். இப்படி 250 ஏரிகளில் கட்டிடங்களை கட்டி அளித்து விட்டார்கள்.
இனியும் இதுபோன்ற சதுப்பு நிலத்தை அளிக்கக்கூடாது. கருப்பு நிறம் என்பது ஒரு வரம் அதை பாதுகாக்க உடனடியாக தமிழக அரசு சதுப்பு நிலங்களை கண்டறிந்து அவற்றிற்கான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தால் அங்கு எந்த ஒரு குப்பைகளையும் கொட்ட முடியாது. இன்றைக்கு பள்ளிக்கரணை சதுப்பு நிறை ஏரியில் ஒரு டன்னுக்கு மேல் அங்கு குப்பை, கழிவு நீர் கொட்டப்பட்டு வருகிறது. இதனை பாதுக்காத்தால் வரும் இளைய சமூதாயத்திற்கு எவ்வளவு பெரிய விஷயம் என்று கூறினார்.
