மாணவர் நலனே எங்கள் நோக்கம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு? – congress to launch statewide neet protest led by manickam tagore

நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறிய அமைச்சர் ராஜேஷ்குமார், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இதேவேளை, இருமொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சரின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ராஜேஷ்குமார் , நீட் தேர்வு , கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸும் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“நீட் சமூகநீதிக்கு எதிரானது”

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள்கசிவு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சமூகநீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகளை பாதிக்கும் கல்வி முறையாகவே நீட் தேர்வு மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

“கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு இல்லை”

2016-ஆம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், நீட் அறிமுகமான பிறகு கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உயர்கட்டண தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதால், மருத்துவக் கல்வி வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“மாணவர் நலனுக்காகவே போராட்டம்”

நீட் தேர்வை காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்தில் அணுகவில்லை என்றும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தங்களதுநோக்கம்என்றும் அமைச்சர் ராஜேஷ்குமார் வலியுறுத்தினார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மத்திய அமைச்சரின் ராஜினாமா கோரிக்கை

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் வலியுறுத்தினார். பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் நீட் தேர்வு மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

“CM விஜய் உங்களுக்கு பதில் சொல்ல தேவையில்ல” – rajasekar

இருமொழிக் கொள்கை குறித்து பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு மற்றும் தமிழகம் என்ற சொற்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை; இரண்டும்ஒன்றையே குறிக்கின்றன என்றார். மேலும், இருமொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஏற்கனவே பலமுறை தெளிவாக விளக்கியுள்ளதாகவும், தினமும் அதே கருத்தை மீண்டும் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். மாநில உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கல்வி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Source link