லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய மு.க. ஸ்டாலின்..- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – m.k. stalin returns to chennai after london trip receives enthusiastic welcome at the airport

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக குறைவான இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்று விஜய் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேட்டு வழக்குகள் குறித்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளார். இதனால் திமுகவின் முக்கிய அமைச்சர்களான கே. என் .நேரு ,எ.வ.வேலு மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.

மறுபுறம் தமிழக வெற்றி கழக அரசு மீதும் முதல் அமைச்சர் விஜய் மீதும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதிகரிப்பு மின்வெட்டு பிரச்சனை உள்ள இவைகள் குறித்து திமுக கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது ,இந்த பரபரப்பான அரசியல் களத்திற்கு நடுவே கடந்த ஜூலை 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

இன்பநிதி பட்டமளிப்பு விழா

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்ப நிதி லண்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு துணை தொடர்பான பட்டப் படிப்பு படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 14ஆம் தேதி இன்ப நிதியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவரது மனைவி கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் லண்டன் சென்று விழாவில் பங்கேற்றனர்.

மேலும் தன்னுடைய பேரன் இன்பநதி பட்டம் பெற்றதைத் தொடர்ந்து முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் கவனம் பெற்றது. மேலும் மு க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 நாட்கள் லண்டனில் தங்கி இருந்து ஓய்வு எடுப்பார்கள் என்று திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் திரும்புவதில் தாமதம்

இந்த நிலையில், என்னுடைய லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்று சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியானது.மேலும் எட்டு மணிக்கு சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இதற்காக சென்னை விமான நிலையத்தில் மு க ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பாக காலை 7:00 மணி முதல் விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிக அளவில் கூட ஆரம்பித்தனர்.
மேலும் இதற்காக சிறிய மேடை அமைக்க பெயர் பலகை கொண்டுவரப்பட்டது.ஆனால் இதற்கு விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனுமதிக்கவில்லை மேலும் தாரை தப்பட்டை போன்ற இசை கருவிகளுடன் கூடிய கலைஞர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.

மு.க. ஸ்டாலின் சென்னை வருகை

இதனால் விமான நிலையத்தில் ஏராளமான கட்சியினர் காத்திருந்த நிலையில், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், த.மோ. அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் தற்போது கலைந்து செல்லுமாறும், இரவு மீண்டும் வருமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, கட்சியினரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.இந்த நிலையில் தற்போது 9 மணியளவில் லண்டன் சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்சென்னை வந்தடைந்தார் . சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Source link