IND vs ENG 3rd ODI – 360 அடித்து தோற்ற இந்தியா: தோல்விக்கான 3 முக்கிய காரணங்கள்: லிஸ்ட் இதோ – how england team beat india team by 27 runs in 3rd odi

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில், முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது, மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவர்களில் 387/3 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது. பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்களையும், ஜாகப் பெத்தல் 93 பந்துகளில் 01 ரன்களையும், ஜோ ரூட் 48 பந்துகளில் 74 ரன்களையும் குவித்து அசத்திய நிலையில், இறுதிக் கட்டத்தில், ஜாஸ் பட்லர், 13 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனால்தான், இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 387/3 ரன்களை குவிக்க முடிந்தது. குர்நூர் பிரார் 10 ஓவர்களில் 97 ரன்களை வாரி வழங்கிறார். அனைத்து பௌலர்களும் 6+ எகனாமியில்தான் பந்துவீசினார்கள்.

இந்திய அணி இன்னிங்ஸ்: மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் அபாரமாக செயல்பட்டனர். ரோஹித் சர்மா, 110 பந்துகளில் 17 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 138 ரன்களை குவித்த நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் 84 பந்துகளில் 77 ரன்களையும், விராட் கோலி, 60 பந்துகளில் 74 ரன்களையும் குவித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள்.

இதனால், இந்திய அணி, ஒரு கட்டத்தில், 44ஆவது ஓவரில் 304 ரன்களை எடுத்திருந்தது. இதனால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு, கடைசிவரை இருந்த நிலையில், அடுத்து வந்த பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.

இஷான் கிஷன் 14 (12), ஷ்ரேயஸ் ஐயர் 0 (3), கே.எல்.ராகுல் 12 (8), அக்சர் படேல் 2 (3), குர்நூர் பிரார் 18 (14) ஆகிய எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 360/7 ரன்களை மட்டும் எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.

1.ஐந்து பௌலர்களுடன் சென்றது: மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில், 5 பௌலர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். ஒரு பார்ட் டைம் பௌலர் கூட இல்லை. இதனால், குர்நூர் பிரார் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த சமயத்தில், இந்திய அணியால், மாற்றாக ஒரு பௌலரை பந்துவீச வைக்க முடியவில்லை. பிராரை 10 ஓவர்களையும் வீச வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், பும்ரா இல்லாத நிலையில், எந்த பௌலரும் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் தோல்விக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.

2.ஜோ ரூட் பார்ம்: கடந்த 6 ஒருநாள் போட்டிகளிலும், ஜோ ரூட் அரை சதம் கடந்துள்ளார். மேலும், ரூட்டால் அபாரமான முறையில் பார்ட்னர்ஷிப்பும் அமைக்க முடிகிறது. ரூட், ஒருபக்கம் நிலையாக ஆடுவதால், மறுபக்கம் மற்ற பேட்டர்களால், அழுத்தங்கள் இல்லாமல் விளையாட முடிகிறது. ரூட் இப்படி நல்ல பார்மிலும் இருந்ததும், பார்ட்னர்ஷிப்புகளை சிறப்பாக அமைத்ததும், இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

3.மிடில் வரிசை சொதப்பல்: இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டர்கள் அபாரமாக செயல்பட்டனர். பிறகு, கடைசி 6 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, விராட் கோலி, கே.எல்.ராகுல், அக்சர் படேல் போன்றவர்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. குறிப்பாக, ஜாஸ் பட்லரைப் போல, இந்திய அணியில், ஒரு பேட்டரால் சிறப்பாக பினிஷிங் செய்ய முடியவில்லை. இதுவும், தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Source link