Lalitha navaratna malai lyrics லலிதா நவரத்தின மாலை பாடல் வரிகள் : கடன்,வறுமை நீங்க தினமும் படிக்க வேண்டிய பாடல்

லலிதா நவராத்தின மாலை என்பது அம்பிகையை நவரத்தினங்களதல் அலங்கரித்து பாடுவதாகும். அகத்திய முனிவரால் அருளப்பட்ட இந்த பாடலை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அல்லது பெளர்ணமி நாட்களில் நடிப்பதால் நவரத்தினங்களை போல் ஒளிமயமான வாழ்க்கை அமையும், தீராத கடன் பிரச்சனை, வறுமை தீர்ந்து நிலையான செல்வம், ஆரோக்கியம், மனஅமைதி பெருகும் என்பது நம்பிக்கை.தினமும் வீட்டில் விளக்கேற்றி இதை படித்து வந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

லலிதா நவராத்தின மாலை :

ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால் சேர்க்கும்
நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயக வாரணமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா

ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா
ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா
ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம் :
கற்றும் தெளியார் காடேகதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில்
அவம்பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளேவற்றாத
அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
2. நீலம் :

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
3. முத்து :

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்தத்தேறிய நான்
தனயன் தாய் நீசாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
4. பவளம் :

அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
5. மாணிக்கம் :

காணக் கிடையா கதியானவளேகருதக்
கிடையாக் கலையானவளேபூணக்கிடையாப்
பொலிவானவளேபுனையக் கிடையாப்
புதுமைத்தவளே நாணித்திரு நாமமும் நின்
துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதாஜெய ஓம் லலிதாம்பிகையே
6. மரகதம் :

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதாஜெய ஓம் லலிதாம்பிகையே
7. கோமேதகம் :

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
8. பது மராகம் :

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்
பாசஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதாஜெய ஓம் லலிதாம்பிகையே
9. வைடூர்யம் :

வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத்தகுமோநிகளம்
துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற் றநுபூதி பெறும்அடியார் முடிவாழ்
வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வா ரவரே (மாதா)

தொடர்புடைய பிற மந்திரங்கள் : லலிதா சகஸ்ரநாமம், காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம்

Source link