ஒரே ஆண்டில் 4 ஹிட் படங்கள், இயக்கிய முதல் 7 படங்களும் சூப்பர்ஹிட்.. திரைக்கதை மன்னன்.. மறக்க முடியாத சகாப்தம் பாக்யராஜ்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

பிரபல நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.

தமிழ் திரைப்பட துறையில் பன்முகம் கொண்ட ஆளுமைகளில் பாக்யராஜும் ஒருவர். நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் பாக்யராஜ். 1953-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பாக்யராஜ் பிறந்தார். 1977-இல் ஜி. ராமகிருஷ்ணன், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினர்.

திரைக்கதை மன்னர் என்று போற்றப்பட்ட பாக்யராஜ், 1979-ம் ஆண்டு சுவரில்லா சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

பின்னர் ஒரு கை ஓசை, இளமை கோலம், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு, பொய் சாட்சி, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், ஒரு கைதியின் டைரி, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரிராரோ, சுந்தர காண்டம், வீட்ல விசேஷங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சொக்கத்தங்கம் என பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார்.. இதில் மௌன கீதங்கள், இது நம்ம ஆளு போன்ற படங்கள் பாக்யராஜுக்கு பெரும் திருப்பத்தை தந்தன..

பிரபல இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டியராஜ் போன்றவர்கள் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் தான்.. பிரபல இயக்குனராக மட்டுமின்றி நல்ல நடிகராகவும் பாக்யராஜ் வலம் வந்தார்.. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்..

புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், இது நம்ம ஆளு, அவசர போலீஸ், அம்மா வந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்..

ஒரே ஆண்டில் 4 ஹிட் படங்களை கொடுத்தவர், இயக்கிய முதல் 7 படங்களிலும் வெற்றி தந்தவர் என்ற சிறப்பும் பாக்யராஜுக்கு உண்டு. அமிதாப் பச்சன் நடித்த ஆக்ரிஸ்தா படத்தை இயக்கி பாலிவுட் திரையுலகையை திரும்பி பார்க்க வைத்தர் பாக்ய்ராஜ். தனது எழுத்து, நடிப்புக்காக தமிழ்நாடு அரசின் விருதுகளையும், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, சைமா விருதுகளையும் பாக்யராஜ் பெற்றுள்ளார்.

பாக்யராஜ் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். அவரது 1981-ல் நடிகை பிரவீனாவை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். கடுமையான மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக அவர் ஆகஸ்ட் 1983-ல் காலமானார். பின்னர்1984 பிப்ரவரி 7 அன்று நடிகை பூர்ணிமாவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இவர் ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ (1982) திரைப்படத்தில் பாக்யராஜுடன் இணைந்து நடித்தவர் ஆவார். இந்த தம்பதிக்கு சரண்யா பாக்யராஜ் என்ற மகளும் சாந்தனு பாக்யராஜ் என்ற மகனும் உள்ளனர். சரண்யா, ‘பாரிஜாதம்’ (2006) மற்றும் ‘போட்டோகிராபர்’ (2006) ஆகிய படங்களில் நடித்துள்ளார். சாந்தனுவும் சித்து +2, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்திருந்தார்..

2104-க்கு பின்னர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவாராக இருந்தார்.. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணி புரிந்தார். தனது குரு பாரதிராஜா காலமான 17 நாட்களில் அவரின் சிஷ்யரான பாக்யராஜும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது தனித்துவமான எழுத்து இயக்கம் நடிப்பு மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்த பாக்யராஜ், இன்று நம்முடன் இல்லை.. ஆனாலும் பாக்யராஜ் என்ற சகாப்தம் தமிழ் திரையுலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.!

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிட்டீர்களா..? 5 நாட்களுக்குள் இதை செய்தால், உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்..!

Source link