விரைவில் நல்ல கூட்டணி அமையும்: ஜி.கே.மணி

சென்னை,

பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் டாக்டர் ராமதாஸ் உங்கள் மனதில் பட்டதை தயக்கமில்லாமல் சொல்லுங்கள் என்று கேட்டார். குறிப்பாக வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து அனைவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ராமதாசிடம் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வெளியிடுவார்.

எந்தக் கூட்டணி சரியாக இருக்கும், மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது. எந்த தொகுதியில் வெற்றி பெற முடியும் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் ஆலோசித்து வருகிறோம். டாக்டர் ராமதாஸ் தலைமையில் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம். விரைவில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி குறித்த முழுமையான விவரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பா.ம.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

சின்னம் (மாம்பழம்) கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அது நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினை. நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கையோடு இருக்கிறார். தேர்தல் அரசியலில் டாக்டர் ராமதாசை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link