ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடக்கத்தில்கும்ப ராசியில் சந்தித்து வரக்கூடிய ராகு பகவான், செவ்வாய் கிரகம் ஆளக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைய உள்ளனர். ஜோதிடத்தில் நிழல் கிரகம் என அழைக்கப்படும் ராகுவின் மாற்றம் சில ராசிகளுக்கு மிகவும் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். அந்த விதத்தில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் சர்ப்பகிரகம், நிழல் கிரகம் என அழைக்கப்படக்கூடிய ராகு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி செவ்வாய் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். நட்சத்திரம் தொழில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும், நிதி நிலையில் முன்னேற்றமும் தரக்கூடியதாக இருக்கும். எந்தெந்த ராசிகள் நன்மையை அதிகமாக பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
அன்பர்களுக்கு இந்த மாயாவி கிரகமான ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியானது உங்களுக்கு வரப்பிரசாதம் ஆக அமையும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த, குழப்பத்தைத் தந்த பணிகளை ஏற்றுக் கிரகமாக முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக தடைகள் நீங்குவதால் செல்வ வளம் மற்றும் லாபம் பெருகும். குடும்பத்திலும் பணியிடத்திலும் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும். நேரம் உங்கள் மீதான மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
இந்த காலத்திலும் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். வெளியூர் வெளிநாடு தொடர்பான வேலை தொடர்பான கனவுகள் நனவாக வாய்ப்புகள் உண்டு.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் உங்களுடைய நிதி நிலைமை பெரிய அளவில் முன்னேற்றத்தை காணும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த முதல் இடங்கள் மூலம் கணிசமான லாபத்தை பெறுவீர்கள். சிறப்பான நிலை மற்றும் அருளால் உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் வரும். தடைப்பட்டு வந்த வேலை, பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
இந்த காலத்தில் உங்களுக்கு திடீரென தன உறவு கிடைக்கலாம். இருப்பினும் அதை சரியான விதத்தில் சேமிப்பது நல்லது. ஆடம்பரம் மற்றும் அகங்காரத்தை தவிர்ப்பது அவசியம். நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடியவராக இருப்பின் பெரிய வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கும். நீண்ட காலமாக தொந்தரவு தந்த உடல் நல பிரச்சினைகள் விலகும். நிவாரணம் அடைவீர்கள்.
சிம்ம ராசி
சிம்மராசி நண்பர்களுக்கு இந்த காலகட்டத்தில் உங்களுடைய தொழில் தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இந்த நட்சத்திர பெயர்ச்சியானது உங்களுக்கு நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வேலை தேடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கலாம்.
கனவுகள் நினைவாக வாய்ப்புகள் உண்டு. நீண்ட காலமாக மன குழப்பத்தை தந்த வழக்குகளில் இருந்து நிவாரணம் அடைய அல்லது வெற்றி பெற முடியும். உங்களுடைய நிதி நிலை முன்னேற்றம் அடையும். புதிய வேலைகளையும் தொடங்க மற்றும் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் உண்டு. கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு அவிட்ட நட்சத்திரத்தில் நுழையக்கூடிய ராகுவின் பெயர்ச்சி காரணமாக உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த வழக்கு விவகாரங்களில் இருந்து விடப்பட்ட வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய பிள்ளைகள் தொடர்பான கவலைகள் தீரும். அவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. நீண்ட காலமாக நினைத்த புதிய வீடு வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் செய்யக்கூடிய நபர்கள் அதில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண்பார்கள். பழைய முதலீடுகள் லாபத்தை தரும். உங்களுடைய வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
ராகுவின் அருள் யாருக்கு கிடைக்காது?
மேலே குறிப்பிட்ட மேஷம், மிதனம், சிம்மம் மற்றும் தனுசு உள்ளிட்ட நான்கு ராசிகளுக்கு ஆக இருக்கும். மற்ற ராசிகள் இந்த காலத்தில் சற்று நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அல்லது நீங்கள் செய்த வேலைக்கான பலன் கிடைத்த தாமதமாகலாம். இருப்பினும் உங்களுடைய முயற்சிகளையும், பொறுமையும் கைவிடாமல் மன வலிமையுடன் செயல்படுவது அவசியம்.
