பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.டி. தி டெவில்’ திரைப்படம் வெளியாகும் முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் சஞ்சய் தத் மற்றும் நோரா படேஹி இணைந்து நடித்துள்ள ‘சர்கே சுனார் தேரி சர்கே’ பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் பாலியல் சார்ந்த குறிப்புகளை கொண்டுள்ளதாக கூறி சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொரில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆபாச பாடலுக்கு முழுவதுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இதனை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
