முதலமைச்சர் விஜய் தலைமையில் நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நீர்வளத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு.தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த ,நீராட்சி திட்டத்தின் மூலம் தமிழகத்தில் புதிய விவசாயக் குளங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் பற்றி பேசப்பட உள்ளது.

நதிநீர் இணைப்பு திட்டங்களின் சாத்தியக்கூறு பற்றி பேசப்படவுள்ளது. பாசனப் பரப்பை அதிகப்படுத்துதல், நீர்ப்பாசன திட்டங்களை துரிதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தமிழகத்தில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய நீர் திட்டங்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கிய நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனையில் பேசப்பட உள்ளது.

Source link