சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தற்போது குஜராத் டைடன்ஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாய் கிஷோரை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் தீவிர பேச்சு வார்த்தையை நடத்திய நிலையில், அதே அணியிடம் மற்றொரு வீரரையும் வாங்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது, சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும், சிஎஸ்கேவுக்கு விட்டுக்கொடுக்க குஜராத் டைடன்ஸ் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாய் கிஷோருக்கு மாற்றாக சர்பரஸ் கானை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முன் வந்த நிலையில், கிஷோருக்கு மாற்றாக உர்வில் படேலை விட்டுக்கொடுத்தால், வாஷிங்டன் சுந்தரை பணம் பெற்றுக் கொண்டு அனுப்ப தயார் என குஜராத் டைடன்ஸ் அணி தெரிவித்துள்ளார்களாம்.
சிஎஸ்கே, மாஸ்டர் பிளான்: இந்நிலையில், குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகம் கேட்டதைப் போலவே, உர்வில் படேலை விட்டுக்கொடுத்து சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை வாங்கிவிட்டு, பிறகு, டெல்லி கேபிடல்ஸிடன் நூர் அகமதுவை கொடுத்து அசுதோஷ் சர்மாவை பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உர்வில் படேலைப் போலவே, அசுதோஷ் சர்மாவும் அதிரடி வீரர்தான். மேலும், லோவர் மிடில் வரிசையில், தொடர்ச்சியாக ரன்களை அடிக்க கூடிய வீரராக இருக்கிறார். அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸுக்கும் ஒரு தரமான ஸ்பின்னர் தேவைப்படுகிறார். இதனால், சிஎஸ்கேவின் இந்த டிரேடிங் ஆப்பரை டெல்லி கேபிடல்ஸ் ஏற்றுக் கொள்ளும் எனக் கருதப்படுகிறது.
குஜராத்துக்கும் பிரச்சினை இல்லை: குஜராத் அணியில், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள், அதிகமாக இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோருக்கு மாற்றாக மனவ் சுதர் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால், அணிக்கு மிடில் வரிசையில் அதிரடி காட்டக் கூடிய ஒரு பேட்டர் தேவைப்படுகிறார். இதனால்தான், சுந்தர், சாய் கிஷோரை விடுவித்து, உர்வில் படேலை வாங்க குஜராத் முடிவு செய்துள்ளது.
இந்த டிரேடிங் டீல் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டால், சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சு பௌலர்கள் இடங்களில் சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரால் நீண்ட காலத்திற்கு ஆட முடியும். மேலும், ஸ்பின் துறையில், வெளிநாட்டு வீரரை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறார். மேலும், தோனிக்கு அடுத்து, அவரது பினிஷர் இடம், அசுதோஷ் சர்மாவுக்கு செல்லும். இதனால், சிஎஸ்கேவின் பெரிய பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், வேகப்பந்து வீச்சாளர்கள் இடங்களில், அனுபவமிக்க வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியிடம் இருந்து முகமது ஷமியை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாந்த் வீரை கொடுத்துவிட்டு, முகமது ஷமியை பெற உள்ளார்களாம். ஒருவேளை, ஷமிக்கு மாற்றாக ஒரு இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் யாரையாவது லக்னோ அணி கேட்டாலும், அவரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கேவை பொறுத்தவரை, அடுத்த 5-10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைப்பதைவிட, அடுத்த சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
