பழனி கோவில் நில மோசடி: தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல் – சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் ஆவேசம்! – cpi p. shanmugam has criticized palani land scam biggest corruption scandal to have occurred in tamil nadu to date

பழனி முருகன் கோவில் நில விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் மீது திமுக குற்றம் சாட்டி வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல்

குறிப்பாக மேல் அதிகாரிகளிலிருந்து சிறிய பொறுப்பில் உள்ளவர்கள் முதல் பலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பத்திரப்பதிவுத்துறையில் செல்வாக்கு மிக்க நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆகவே இந்த பத்திர பதிவு மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் சட்டத்தின் முன் நிற்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

மேலும் இந்த பத்திரப்பதிவுத்துறை ஊழல் வழக்கில் நீதிமன்ற முற்பட அனைவரையும் ஏமாற்றி ஏற்கனவே இருக்கக்கூடிய வழக்குகளை பற்றி எல்லாம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் மிகப்பெரும் மோசடியை அரங்கேற்று உள்ளன.இதுவரை தமிழ்நாட்டில் நடந்திருக்கக் கூடிய மிகப்பெரிய மோசடி பழனி நில விவகாரம் தான் என்று கூறினார்.தற்பொழுது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது அது முறையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்று கூறினார்.

வழக்கின் பின்னணி என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்திற்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனியார் ஒருவருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1888-ஆம் ஆண்டே பக்தர் ஒருவரால் இந்த நிலம் பழனி கோவிலுக்காக, மடத்தின் பெயரில் தானமாக வழங்கப்பட்டது. ஆனால், இதைச் சிலர் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடி, ஆட்டையைப் போடப் பார்த்துள்ளனர். 1999-ஆம் ஆண்டில் இருந்தே இந்த நிலத்தை வெளியாட்களுக்கு விற்க முயற்சிகள் நடந்தபோதெல்லாம், இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தியது.

வெளிச்சத்திற்கு வந்த மோசடி:

ஆனால், கடந்த ஜூலை 6-ஆம் தேதி, இந்த நிலம் ஒரு தனியார் அறக்கட்டளைக்குத் தான் சொந்தம் என்று சொல்லி, தனிநபர் ஒருவருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த விவரம் வெளியே கசிந்த பிறகுதான் இவ்வளவு பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

அதிரடி நடவடிக்கை:

விஷயம் நீதிமன்றத்திற்குச் செல்லவே, இந்தச் சட்டவிரோத பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து விசாரிக்கவும் ஆணையிட்டது. தற்போது சிபிசிஐடி (CBCID) போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோக, பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. தலைமையிலும் ஒரு தனிக் குழு களத்தில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து கொடுத்த சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய இருவரையும் அரசு தற்காலிக பணிநீக்கம் (Suspension) செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பதிவுத்துறையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து உயரதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link