தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடம் மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் சட்டசபை அரங்கம் தலைமை செயலர் மற்றும் பல்வேறு அரசு துறை செயலர்களின் அலுவலகம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தலைமை செயலகத்தின் கோட்டையின் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது இது 10 மாடி கட்டிடம் ஆகும். இங்கு வேளாண்மை, நெடுஞ்சாலை ,பொதுப்பணித்துறை கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட 32 துறைகளில் செயலாளர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
முதலமைச்சரின் அலுவலகத்தில் இட நெருக்கடி?
குறிப்பாக தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அலுவலகமும் இந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது.இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் சந்திப்பதற்காக நாள்தோறும் உயரதிகாரிகள் ,முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ,தொழில் துறை நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் என பல தரப்பு அதிகாரிகள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். இதனால் முதலமைச்சரின் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது
தலைமை செயலகத்தில் இடமாறும் முதல்வர் விஜய் அலுவலகம்
மேலும் முதலமைச்சர் விஜய் சந்திப்பவர்களுக்கும் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தை முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, அங்கு நடைபெறும் கருத்தரங்க கூடம் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பங்கேற்பவர்களுக்கு உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்திற்கு மாற்ற திட்டம்
இந்த விஷயத்தில் இட நெருக்கடி என கூறப்பட்டிருந்தாலும் முதலமைச்சர் விஜய் தற்போது பயன்படுத்தும் அரை வாஸ்துபடி சரியில்லை என்று கூறப்படுகிறது தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் இருக்க வேண்டும் என ஜோதிடர் ஒருவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் முதலமைச்சர் அலுவலகத்தை கோட்டை கட்டிடத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு தகவலும் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் விஜய்யின் ஆன்மீக அரசியல் நகர்வு
மேலும் முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தவெக கட்சியின் தேர்தல் வெற்றிக்கு முன்பும் பின்பும் திருச்செந்தூர் முருகன் கோவில், வேளாங்கண்ணி பேராலயம், மற்றும் நாகூர் தர்கா , ஷீரடி சாய்பாபா கோவில், கொல்லூர் மூகாம்பிகை கோவில்உள்ளிட்ட பல்வேறு மதங்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டார். மேலும் அவரது சிறப்பு ஜோதிடர் ஆலோசனையின் படி, உடையில் இருந்து பயணம் வரை மேற்க்கொள்வதாக கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் அலுவலகம் இடமாறும் நடவடிக்கையில் அதனடையில் தான் நடக்கிறதாம்.
