திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சியா? அதிமுக மாஃபா பாண்டியராஜன் சொன்ன புதிய தகவல் – former minister mafa pandiarajan has denied reports of a dmk and aiadmk alliance

திமுக, அதிமுக கூட்டணி என தொடர்ச்சியாக தவெகவினர் பேசி வரும் நிலையில், இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்று எதிர்க்கட்சிகள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். டைவர்ஷன் அரசியலில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக கூட்டணி எந்த காலத்திலும் நடக்காது ஒன்று என திட்டவட்டமாக அககட்சிகளை சார்ந்தவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் திமுக, அதிமுக குறித்து புதிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

தவெக அமைச்சரான நிர்மல் குமார் தொடர்ச்சியாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது என எடப்பாடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டிருக்கிறார். அதோடு சமீபத்தில் திமுக, அதிமுக ஒருங்கிணைப்பு குழுவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்குவார்கள் எனவும் நிர்மல் குமார் பேசியிருந்தார். இந்நிலையில் அவருடைய இந்த கருத்துக்கு மா.பா. பாண்டியராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக, அதிமுக கூட்டணி என்று புரளி கிளப்பப்படுவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி விட்டார். அதோடு எந்த நிலையிலும் இந்த கூட்டணி சிந்தித்து கூட பார்க்க முடியாது எனவும் தெளிவாக கூறியுள்ளார். அதிமுகவை ஆதரிப்பதற்கு திமுக முன்வந்தது. ஆனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த நேரத்திலும் திமுகவின் ஆதரவினை பெற்று ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்லவில்லை. முழுக்க முழுக்க இது புரளி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதோடு கட்சியில் இருந்து வெளியே போகிறவர்கள் திமுக, அதிமுக கூட்டணி என்ற புரளியை சாக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். குதிரை பேரம் நடத்துவதற்கான சாக்காக இது பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது மிக மிக தெளிவாக தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ராஜேந்திர பாலாஜி, சாதாரண விஷயம் சொன்னதை, திரித்து போட்டு புரோக்கர் வேலை செய்கிறார் என்று அமைச்சர் பேசியுள்ளார். இது மிகத்தவறான பேச்சு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு நரேடிவ் செட் செய்யப்படுகிறது. அதிமுக தீர்ந்த சக்தி ஆக்கப்பட வேண்டுமென இந்த புரளி பரப்பப்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் மா.பா. பாண்டியராஜன். மேலும் 30 ஆண்டுக்கால வரலாறு கொண்ட அதிமுகவை தீர்ந்து போன கட்சி என்று முதல்வர் விஜய் விமர்சிப்பது அவருடைய பதவிக்கு உகந்தது அல்ல எனவும் அவரின் பேச்சினை மா.பா. பாண்டியராஜன் கண்டித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகுபவர்கள் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தார். அதன் காரணமாகவே கட்சியில் இருந்து விலகுகிறோம் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். இதனையடுத்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைவதற்கு இதனை ஒரு சாக்காக அனைவரும் கூறி வருகின்றனர் என அதிமுகவை சார்ந்தவர்கள் பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர். அதே போல் மா.பா. பாண்டியராஜன் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதனிடையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக தீய சக்தி என்று கூறி அதிமுகவை துவங்கினார் எம்ஜிஆர். அதே கருத்தில் தற்போது வரைக்கும் அதிமுக உறுதியாக உள்ளது. திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லையென எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link