கரூர் அரசு வேலை விவகாரத்தில் என்ன நடக்கிறது? தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம் – karur government job case tamilnadu government reply july 24 high court

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது. இந்த பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானது என்றும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்றும் கடந்த ஜூலை 10ஆம் தேதி நீதிமன்ற விசாரணையில் தெளிவுபடுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல் பணி நியமனம்

மேலும் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர் .சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் நேரடியாக தலையிடுவது சரியாக இருக்காது என்று கூறிய நீதிபதிகள், பணி நியமன கடிதங்களை வழங்குவதற்காக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு அனுமதி அளித்திருந்தது.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

இருப்பினும் இந்த நியமனங்கள் தற்காலிகமானவை என்றும், நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வேலை நியமனம் பெற்றவர்கள் தங்களது முதல் சம்பளத்தை பெறுவதற்கு முன்பாகவே அதாவது இம்மாத இறுதிக்குள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் உயர்வானியத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளரை இந்த வழக்கில் தானாக முன்வந்து ஒரு தரப்பு மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கருணை அடிப்படையில் வேலை வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன இந்த விஷயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட விதைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர்.

கரூர் உயிரிழந்தோர் குடும்ப அரசு வேலை

இந்த நிலையில், பணி நியமன வழக்கு குறித்து மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் முதலமைச்சர் விஜய் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை 29 பேர் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். பதில் மனு இன்னும் முழுமையாகத் தயாராகாததால், ஏற்கனவே நிலுவையில் உள்ள மூன்று வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் கரூர் பணிநியமன வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் கரூர் அரசு பணி தொடர்பான வழக்கில் ஜூலை 24ஆம் தேதிக்குள் பதில் தர உயர் நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்து இருக்கிறது.

வழக்கின் பின்னணி:

கடந்த 2025 ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.அரசின் இந்த முடிவை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரும் வரை பணி நியமன ஆணைகளை வழங்கவோ அல்லது செயல்படுத்தவோ கூடாது எனத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தெளிவான கொள்கை முடிவு இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பணி நியமனம் வழங்கப்பட்டால், அது எதிர்காலத்தில் பல சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும்என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விசாரணையின் போதுதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் இதேபோல அரசு வேலை வழங்கப்பட்டது என்ற முந்தைய சம்பவத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேற்கோள் காட்டினார்.

Source link