டெல்லி போராட்டத்தில் ஊடுருவிகள்..நீட் தேர்வை உடனே ரத்து செய்யுங்க -மத்திய அரசுக்கு அன்புமணி அலெர்ட் – anbumani alleges tension due to infiltrators entering the neet protest in delhi

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் வலு கட்டாயமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் நீட் தேர்வு எதிராக போராட்டம்

இதனைத் தொடர்ந்து அதே இடத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கிடையே நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகளில் பதாகைகள் ஏந்தியபடி முழக்கமிட்டு பேரணியில் ஈடுபட்டனர்.

தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?

அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .தொடர்ந்து நிலைமை பதற்றமானதால் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். இதில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் தடியடி மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தப்பிக்க பலர் அங்கிருந்து சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பான சூழலாக மாறியது.

போராட்டத்தில் ஊடுருவிகள் புகுந்ததால் பதற்றம்

தொடர்ந்து தேசியக்கொடி இந்திய படி நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட ஆரம்பித்தபோது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,டெல்லி ஜந்தர் நந்தர் பகுதியில் நடத்தப்பட்ட போராட்டம் மாணவர்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது போராட்டம் நீட் தேர்வை சரி செய்கின்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அதற்கு முன்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அவர்கள் கடந்து 20 நாட்களுகளாக ஒரு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் இருக்கிறது. நீட் தேர்வு தேவை இல்லாத ஒன்று. சமூக நீதிக்கு எதிரானது,

அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு

மாநில உரிமைகளுக்கு எதிரானது, தமிழகத்திற்கு எதிரானது குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. நீட் தேர்வில் பல குளறுபடிகள் இருக்கிறது. நீட் தேர்வு என்பது தற்போது வணிகமயமாக்கப்பட்ட தேர்வு, தகுதி இல்லாத நபர்களை எல்லாம் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிற ஒரு தோல்வி அடைந்த தேர்தல். இதனை நிச்சயமாக அகற்ற வேண்டும். இதனை புரிந்து கொண்டு இந்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த தேர்வுகளை மாநில அரசுகளுக்கு விட்டுவிட வேண்டும்.

நீட் தேர்வில் மாநில அரசு வினாத்தாள் தயார் செய்வது திருத்தம் உள்ளிட்டவை ஈடுபடுத்திக் கொள்ளும். இவ்வளவு மிகப்பெரிய மோசமான தேர்வை நடத்துவது அர்த்தம் கிடையாது என்று கூறினார்.இதற்காக தான் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு அரசும் பொறுமை காக்க வேண்டும் ஏனென்றால் அங்கு போராட்டம் நடத்துபவர்கள் இளைஞர்கள் என்று கூறினார்.

தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள போகிறீர்கள் தமிழகத்தின் சார்பில் முக்கிய பிரச்சனைகள் ஏதாவது எழுத தயாராக இருக்கிறீர்களா என்று கேள்விக்கு தமிழகத்தில் மிக முக்கிய பிரச்சனையும் மேகதாது பிரச்சனை தான் இன்றைக்கு மேகதாது அணை கட்டுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள் ஒன்றாக இணைய வேண்டும். திமுக அதிமுக, பாமக காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணை வேண்டும் என்று கூறினார்.

Source link