3 சீன குடிமக்கள் உட்பட 10 பேர் படுகாயம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 படுகாயமடைந்துள்ளனர். மாஸ்கோவின் முக்கிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டொமோடெடோவோ ((Domodedovo)) நகரில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், 3 சீன நாட்டவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்ததாக மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வொரோபியோவ் ((Andrei Vorobyov))தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ரஷ்யாவில் உள்ள சீனத் தூதரகம் இது தொடர்பான விவரங்களைச் சரிபார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோ மீது 400-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது 400-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் வீசிய டிரோன்கள் பெரும்பாலும் வெகு தொலைவிலேயே அழிக்கப்பட்டதாகவும், சில டிரோன்கள் மட்டும் மாஸ்கோ அருகே இடை மறித்து அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் தாக்குதலில் பல குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு- பாக்.போக்குவரத்து சங்கம் எதிர்ப்பு
பாகிஸ்தானில் சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கராச்சி சரக்கு போக்குவரத்து சங்கத்தினர், விலை உயர்வு முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.44 ரூபாயும், டீசல் 31 ரூபாயும் உயர்த்தப்பட்டது. போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும், எரிபொருள் விலை உயர்வுகள் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளியுள்ளதாகவும் போக்குவரத்து சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
