தலைமைச் செயலகத்திற்குள் திடீர் போராட்டம்..! ராப் பாடகர் அறிவுவை கைது செய்த போலீஸ் – neet protest singer arivu arrested in chennai police

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராப் பாடகர் அறிவை காவல்துறையினர் கைது செய்தனர்.

தகவலின்படி, பாடகர் அறிவு தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் தலைமைச் செயலக வளாகத்திற்குள் சென்று, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று முழக்கமிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தை கலைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி அரசு வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பாடகர் அறிவு மற்றும் அவருடன் வந்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக தலைமைச் செயலகத்தில் சிறிது நேரம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் மற்றும் மாணவர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link