நியூயார்க் மேயர் மம்தானிக்கு அதிபர் டிரம்ப் சவால்
அமெரிக்கா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை யாராலும் கைது செய்ய முடியாது என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சர்வதேச போர் குற்றங்களுக்காக நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் மம்தானி முயற்சி செய்து வருவதாக தகவல் பரவிய நிலையில், அவரை குறிப்பிடாமல் ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மக்காச்சோள கப்பலை தாக்கிய ரஷ்யா
உக்ரைனின் தெற்குத் துறைமுகமான ஒடெசா அருகே மக்காச்சோளத்தை ஏற்றிச் சென்ற கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த மாதம் ஒடெசா பகுதியில் நடந்த ரஷ்யத் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் (( Nuristan )) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் பலியான நிலையில், மேயர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 80 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மாயமானவர்களை தேடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
