வர்த்தக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா

கப்பலில் பணியிலிருந்த 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி 

உக்ரைன் கடற்கரையோரம் கருங்கடலில் சென்று கொண்டிருந்த வர்த்தக கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 19ஆம் தேதி கினியா-பிசாவ் ((Guinea-Bissau)) கொடி ஏந்திய எம்.வி கோல்டன் லியோ என்ற வர்த்தகக் கப்பல், உக்ரைனின் ஒடேசா நகரில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட நிலையில், அதன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அந்த கப்பலில் சிரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 17 பேர் பணியில் இருந்த நிலையில், அவர்களுள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவை சேர்ந்த கடல்சார் பணியாளர்கள் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி

அமெரிக்க கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் “சமமற்ற முறையில் நடத்தப்படுவதாக”க் கூறி, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார்.

ஒயின், ஹாக்கி மட்டைகள் , சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவித வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி பொருட்கள், பொட்டாஷ், மீன் மற்றும் முக்கியமான கனிமங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித வரிவிதிப்பு 30 நாட்களில் அமலுக்கு வரவுள்ளது.

Source link