‘சசிகலா – டிடிவி மீண்டும் வரணும்’ இடைத்தேர்தலுக்காக அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்: என்ன செய்வார் எடப்பாடி? – aiadmk cadres want sasikala and ttv back what will eps do

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், சமூக வலைதள பங்களிப்பை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் எடப்பாடி பழனிசாமிவலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பிரிந்து சென்ற தலைவர்களும் மீண்டும் ஒரணியில் இணைந்தால்தான் வாக்குகள் சிதறாமல் வெற்றி பெற முடியும் என சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம்

கட்சியின் வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் அதிமுகவின் செயல்பாடுகள் மற்றும் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா – டிடிவி குறித்து நிர்வாகிகள் கருத்து

கூட்டத்தின் போது சில நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே வாக்குகள் சிதறாமல் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகும் என்று அவர்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கருத்துகள் கூட்டத்தில் கலந்துகொண்ட சில நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதைந்த அதிமுக?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான அதிமுக தொடர்ச்சியாக பல கட்ட உள் கட்சி பூசல்களை சந்தித்து உள்ளது. கட்சியின் தலைமை மறையும் போது கட்சி தனது கட்டுப்பாட்டை இழப்பதும் அதனை திருப்பி மீள் உயிர்ப்பு கொடுப்பதும் வழக்கம் தான் எனினும் அதிமுகவின் நிலை வேறாக இருக்கிறது.
எடப்பாடி தனது பொதுச் செயலாளர் பதவிக்கு இடையூறாக இருப்பார்கள் எனக்கு அனைவரையும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் அதுவே கட்சியையும் அவரையும் பலவீனப்படுத்த மிக பெரும் காரணமாக மாறியது.

விஜய் அலை

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் அலையை தமிழக அரசியல் சூழலில் நிலைபெற செய்தது. அந்த அலை திராவிட கட்சிகளின் மீள்தன்மையை சிதைத்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக திமுக அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு சட்டமன்றம் தற்போது உருவாகி இருக்கிறது.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில்தான் நேற்றைய தினம்50 -க்கும் மேற்பட்டசி.வி சண்முகம் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு அதிரடியாக வெளியேறி உள்ளனர் இப்படிப்பட்ட சூழலில் கட்சியின் பலமே ஒற்றுமைதான் எடப்பாடி அதனை மீட்டுகொண்டுவருவாரா என்ற கேள்வி வலுத்துள்ளது.

தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் மிகப்பெரிய சவால் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது மட்டுமல்ல; கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரிசெய்வதும்தான். ஒற்றுமை, இளைஞர்களின் பங்களிப்பு, சமூக வலைதள செயல்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தல்கள் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன.

Source link