புதுதில்லியில் நடைபெற்ற 11வது நிதி ஆயோக் ஆளுநர் குழு கூட்டத்தின் தமிழக முதல்வர் விஜய், தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பிரதமரை தனித்தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.சமீபத்தில்தான் பதவியேற்றுள்ள இந்த மூன்று தலைவர்களும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலங்களை நிர்வகித்து வருவதால் இந்த சந்திப்புகள் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார்
கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை முதன்முறையாக சந்தித்தார். கர்நாடக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த சந்திப்பில் உட்கட்டமைப்பு வளர்ச்சி, முதலீடுகள், நகர்ப்புற போக்குவரத்து, பாசனத் திட்டங்கள், புதுமை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.மாநில வளர்ச்சியை முன்னேற்றுவதில் கர்நாடகா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்.மத்திய–மாநில ஒத்துழைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும். மத்திய அரசும் மாநில அரசும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டால் அதிக வாய்ப்புகள் உருவாகு. மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என அவர் நம்பிக்கை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் திமுக இல்லை! தவெக நிலை என்ன?
டெல்லி பயணத்தை தொடரும் விஜய்
தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்தது, அவர் முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற பிறகு டெல்லிக்கு மேற்கொண்ட இரண்டாவது பயணமாகும்.முன்னதாக அவர் டெல்லி பயணத்தின் போது, கர்நாடகாவின் மேகதாது திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பிரதமரிடம் மனு அளித்திருந்தார். அதேபோல் தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளும் அந்த மனுவில் இடம்பெற்றிருந்தன.இந்த முறை நீட் (NEET) தேர்வு,தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள், மெட்ரோ திட்டங்கள் மற்றும் மாநில வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ரேவந்த் ரெட்டி -பிரதமர் சந்திப்பு
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியும் நிதி ஆயோக் கூட்டத்தின் பிரதமர் மோடியை சந்தித்தார்.சந்திப்பு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும்,மாநிலத்தில் தொழில் முதலீடுகள், அடிப்படை வசதி வளர்ச்சி மற்றும் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் ஆளுநர் குழு கூட்டம், மத்திய–மாநில ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தேசிய வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கவும் அமைக்கப்பட்ட முக்கிய மேடையாகும்.கடந்த ஆண்டில் பல தென் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற நிலையில், இந்த ஆண்டு விஜய், ரேவந்த் ரெட்டி மற்றும் சிவகுமார் ஆகியோரின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
டெல்லியில் 11வது நிதி ஆயோக் கூட்டம்
டெல்லியில் 11வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 மாநிலங்களின் முதலமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டது இதுவே முதல் முறையாகும்.கூட்டத்தின் நிறைவில் பேசிய பிரதமர் மோடி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, இளைஞர்களின் திறன்களை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உலகம் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
ஆனால் அந்த நெருக்கடிகளின் தாக்கம் இந்தியாவைப் பாதிக்கவில்லை .இந்தியாவின் 70 கோடி இளைஞர்கள் நாட்டின் மிகப்பெரிய பலம். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான தனது பயணத்தை மேலும் விரைவுபடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஒத்துமையுடன் நாட்டின் வளர்ச்சிகாக பாடுப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
