பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.
இந்த நிலையில், துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக “துரந்தர் தி ரிவெஞ்ச்” திரைப்படம் இன்று (மார்ச் 19) வெளியானது. நேற்று இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியளவில் இந்த படம் தற்போது இந்தி மொழியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற மொழிகளில் வெளியீடு தாமதமாகியுள்ளதால், ரசிகர்கள் இந்தி பதிப்பை பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மொழி பதிப்புகளுக்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிற மொழி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகின்ற நிலையில், விரைவில் அனைத்து மொழிகளிலும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
