தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட இயக்குநரும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஆர்.வி. உதயகுமார், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் வீழ்ச்சிக்கான காரணம், கட்சிக்காக உழைத்தவர்களை மதிக்காத தலைமையே என விமர்சித்ததுடன், முதல்வர் விஜயின் ஆட்சியைப் பாராட்டியும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட இயக்குநரும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஆர்.வி. உதயகுமார், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் வீழ்ச்சிக்கான காரணம், கட்சிக்காக உழைத்தவர்களை மதிக்காத தலைமையே என விமர்சித்ததுடன், முதல்வர் விஜயின் ஆட்சியைப் பாராட்டியும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் வைபவத்தில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநரும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஆர்.வி. உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது, விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும், தமிழக அரசு மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டி தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
‘ஜனநாயகன் வெற்றி பெற வேண்டும்’
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.வி. உதயகுமார், “முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்தோம். அதேபோல், விரைவில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டோம்” என்றார்.
’30 ஆண்டுகள் விஜயின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது’
முதல்வர் விஜய் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்களுக்கான புதிய தலைமுறை ஆட்சியை வழங்கி வருகிறார் என்று கூறிய அவர், ஒவ்வொரு துறையிலும் ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு செயல்பட்டு வருவதாக பாராட்டினார். “இன்னும் 30 ஆண்டுகள் விஜயின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஹீரோ ஆட்சி அமைத்துவிட்டார்… காமெடியன்கள் இருக்கத்தான் செய்வார்கள்’
ஸ்ரீதர் வேம்பு போட்ட X பதிவு!திமுகவை சீண்டினாரா? சர்ச்சைக்கு காரணம் என்ன?
அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்த ஆர்.வி. உதயகுமார், “ஒரு ஹீரோ ஆட்சி அமைத்துவிட்டால் காமெடியன்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை பார்த்து ரசிப்போம்; ஆனால் முதல்வரின் ஆட்சியை மதிப்போம்” என்று கூறி, அரசியல் எதிர்ப்புகளை நகைச்சுவையாக விமர்சித்தார்.
‘ அதிமுக வீழ்ச்சிக்கு காரணம் உழைத்தவர்களை மதிக்காத தலைமையே’
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இருந்தவன். அந்தக் கட்சிக்காக மனப்பூர்வமாக உழைத்தேன். ஆனால் என்னைப் போன்ற உண்மையாக உழைத்தவர்களை கட்சி வளர்க்கவில்லை. அதுவே அதிமுக வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று” என்றார்.
‘கட்சியை காப்பாற்றியவர்களையே மதிக்கவில்லை’
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை காப்பாற்றியவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும், ஒரு நபரின் விருப்பப்படி மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும் நிலை தொடர்ந்தால், அதிமுக மீண்டும் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுப்பது கடினம் என்றும் ஆர்.வி. உதயகுமார் கருத்து தெரிவித்தார்.
Source link
