விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை விட எச்சரித்து அனுப்பி இருக்கலாம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சனிக்கிழமை திமுக சார்பில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசுகையில் இனி வரும் தேர்தலில் தவெக 5 சதவீத வாக்குகளை கூட பெற முடியாது. சட்டமன்றத்தில் பேய்யரைந்த மாதிரி முதலமைச்சர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். யாரும் வெளியே செல்லாத மாதிரி சட்டசபை மூடுவோம் என்று சொல்கிறார்.
முதல்வர் குறித்த அவதூறு பேச்சு
திமுக காரர்கள் யார் என்று அப்போது காட்டுவோம். விஜயின் முதுகெலும்பை உடைத்து விட்டு செல்வோம் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு எதிராக தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்எல்ஏ மார்க்கண்டேயின் மீது குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவின்படி, மிரட்டல் விடுத்தல், அவதூறு பேசுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!
இதனைத் தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆச்சி மாற்றம் நடைபெறும் பொழுதெல்லாம் இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கண்டேயின் கைது செய்யப்பட்டது .இவ்வளவு தூரம் ஒரு வன்மத்தை காமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டிய என்ன அவசியம் இருக்கிறது. எம் எல் ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததை விட எச்சரித்து அனுப்பி இருக்கலாம்.
பிரேமலதா கண்டனம்
எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது இந்த நிகழ்வை முதலமைச்சரும், தற்போது அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைக்கு சமூக வலைதளங்களில் யார் யாரெல்லாம் என்னவோ பேசி வருகிறார்கள் இதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்றால் நல்ல வழியாக இருக்க முடியாது. எம் எல் ஏ அவதூறாக பேசியது தவறல்லவா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு யார் பேசினாலும் தவறுதான் முதலமைச்சர் அந்தப் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ பொதுக்கூட்டத்தில் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
டெல்லியில் வெடித்த கலவரம்
ஆனால் எம்எல்ஏ கைது செய்யப்படுவதை தமிழக மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து டெல்லியில் வெடித்த கலவரம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு? மக்கள் சக்திக்கு முன்னால் இங்கு எதுவுமே கிடையாது அதனால் அவர்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும் இங்கு நீட் தேர்வு வேண்டாம் என்பது ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சி. இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Source link
