Wednesday remedies for luck புதன்கிழமையில் அதிர்ஷ்டம் தரக் கூடிய பரிகாரங்களும் வழிபாடுகளும்

புதன்கிழமை என்பது அதிர்ஷ்டத்தையும், வளர்ச்சியையும் தரக் கூடிய நாளாக கருதப்படுகிறது. புதிய தொழில், வியாபாரம் துவங்குவதை புதன்கிழமையில் துவங்குவதால் வாழ்க்கையே மாறும். வளர்ச்சி ஏற்படும் என சொல்லப்படுகிறது. புதன்கிழமையில் மகாவிஷ்ணுவையும், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானையும் வழிபடுவது நல்லது. விநாயகர், ஞானத்தின் வடிவம் என்பதால் புதன்கிழமையில் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும். தடைகள் நீங்கி, வெற்றிகள் குவியும் என சொல்லப்படுகிறது.

புதன்கிழமை, நவகிரகங்களின் புதன் பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. புத்தி, கல்வி, வியாபாரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். அறிவாற்றல், பேச்சாற்றல், ஜோதிடம், கணித திறமை ஆகியவற்றிற்கு உரியவராகவம் புதன் பகவான் கருதப்படுகிறார். இதனால் புதன்கிழமையில் சில எளிய வழிபாடுகள், பரிகாரங்களை செய்வதால் புதன் பகவானின் அருள் கிடைப்பதுடன், ஜாதகத்தில் புதனின் பலம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. புதனின் அருள் இருந்தால் அறிவு திறன் மற்றும் பேச்சுத்திறனால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து, அதை நமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெற முடியும். திடீர் அதிர்ஷ்டம் பெற வேண்டும் என்பவர்கள் புதன் கிழமையில் புதன்பகவானை வழிபடலாம்.

புதன்கிழமை வழிபாடு :

1. புதன்கிழமையில் பச்சை நிற மலர் அல்லது துளசியுடன் எளிமையாக வழிபாடு செய்து, முடிந்தால் பச்சைப் பயிறு தானம் செய்யுங்கள். அறிவுத்திறன், பேச்சுத்திறன் மற்றும் நல்ல முடிவெடுக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
2. புதன்கிழமையில் ஒரு நெய் தீபம் ஏற்றி, மனதில் உள்ள தடைகள் விலக வேண்டி அமைதியாக பிரார்த்தனை செய்யலாம். நவமி திதியில் செய்யப்படும் இந்த வழிபாடு துணிவு, வெற்றி மற்றும் எதிர்மறை சக்திகள் விலக உதவும்.
3. இன்று சுவாதி நட்சத்திரம் என்பதால் வெள்ளை மலர் சமர்பித்து வழிபட்டு, சிறிதளவு நீரை ஒரு செடிக்கு ஊற்றுங்கள். சுவாதி நட்சத்திரத்தின் அருளால் மன அமைதி, புதிய வாய்ப்புக்கள் மற்றும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

புதன்கிழமை பரிகாரங்கள் :

– புதன்கிழமை அன்று கல் உப்பு மற்றும் பச்சை பயிறு வாங்குவது மிகுந்த அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும்.

புதன் பகவானுக்குரிய நிறம் பச்சை என்பதால் புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணிந்து அல்லது பச்சை நிற கைக்குட்டையை உடன் வைத்திருப்பது காரிய வெற்றியைத் தரும். இன்று உணவில் பச்சை காய்கறிகள் அல்லது கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தையும் புதன் கிரகத்தின் நற்பலன்களையும் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக முடிந்த அளவு முதலீடு அல்லது சேமிப்பை துவங்குவது லாபத்தை தரும். புதன்கிழமையில் புதன் பகவானுக்குரிய அதிதேவதையான மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இந்த நாளில் பசுவிற்கு உணவு அளிப்பது மிகவும் விசேஷமான ஆன்மீக பரிகாரமாக கருதப்படுகிறது. பச்சை பயறை ஊறவைத்தோ அல்லது வேக வைத்தோ பசு மாடுகளுக்கு கொடுக்கலாம். ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகம், பேனா போன்ற கல்விக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்கலாம். புதவ் பகவானுக்கு ஐந்து விளக்குகள் ஏற்றி, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபடலாம். காலை, மாலை இரு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். இதனால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

Source link