நீட் ரத்து ஒன்றே தீர்வு என மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வு ஆபத்தானது…இதுகுறித்து, சமூக வலைதள பதிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது:டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம், தற்போது நாடு முழுவதிலும் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நீட் தேர்வு முறையானது பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று எச்சரித்த முதல் இயக்கம் திமுக. அதனால் தான், இந்த தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்தில் இருந்தே திமுக, நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

ரத்து ஒன்றே தீர்வு சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை, நீட் தேர்வை ரத்து செய்தல் என்பதே ஆகும். மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Source link