August Horoscope 2026 Benefits,ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: கஜலட்சுமி ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன்கள் – august 2026 monthly horoscope: gaja lakshmi raja yoga brings positive outcomes for 5 zodiac signs

ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. குறிப்பாக மாதத்தின் முதல் நாளில் சுக்கிரன், பின்னர் செவ்வாய், சூரியன், புதன் இரண்டு பெயர்ச்சிகள் என கிரகங்களின் நகர்வுகள் 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்த உள்ளன. அது மட்டும் அல்லாமல் இந்த கிரகங்களின் பெயர் மாற்றம் சேர்க்கைகள் காரணமாக உருவாகக்கூடிய கஜலட்சுமி யோகம் மற்றும் புதஆதித்யா ராஜயோகம் காரணமாக சில குறிப்பிட்ட ராசிகளுக்கு தங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் அதிகரிக்கப் போகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் நடக்க இருக்கும் கிரக பெயர்ச்சிகள் 2026 ஆகஸ்ட் 1, 2026 : சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்
ஆகஸ்ட் 2: செவ்வாய் மிதுன ராசிக்கு மாறுகிறார்
ஆகஸ்ட் 5: புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி நடக்கிறது
ஆகஸ்ட் 17: சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய ஆவணி மாதம் தொடங்குகிறது.
ஆகஸ்ட் 22: புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
மேலும் இந்த மாதத்தில் கடக ராசியில் புதன் நுழையும் போது குருவுடன் இணைந்து கஜலட்சுமி யோகம் மற்றும் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகங்கள் உருவாக்கக்கூடிய காரணத்தால் மேஷம், கடக ராசி உள்ளிட்ட 5 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள்.

மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் உருவாக்க கூடிய கஜலட்சுமி யோகம் மற்றும் புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் புதாதித்ய யோகமும் உருவாக உள்ளன. இந்த கிரகங்களின் மாற்றம் மற்றும் யோகங்களால் உங்களுடைய மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.

இந்த மாதத்தில் புதிய தொடக்கங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்களுடைய வேலைகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சொத்து மற்றும் வாகனம் வாங்கக்கூடிய யோகம் உங்களுக்கு அமையும். இந்த காலத்தில் வருமானத்திற்கான புதிய வழிகளை கண்டறிவீர்கள்.

கடக ஆகஸ்ட் மாத ராசிபலன்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தில் ராசியில் உருவாகும் கஜலட்சுமி யோகம், இரண்டாம் வீட்டில் ‘புதாதித்ய ராஜயோகம்’ உருவாகிறது. இதன் காரணமாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் சிறப்பானதாக அமையும். உங்களுடைய தனித்துவமான செயல்பாடு மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த செயல்பாடு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், பணியிடத்தில் பாராட்டையும் பெற்று தரும். உங்களுடைய நிதிநிலை முன்னேற்றம் அடைவது மனதிற்க்கு தெம்பு தரும். அதே சமயம் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதும், முதலீடு சம்பந்த விஷயங்களை கவனம் செலுத்துவதும் அவசியம்.

சிம்ம ஆகஸ்ட் மாத ராசிபலன்

சிம்ம ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு உங்கள் ராசியில் சூரியனின் பெயர்ச்சி மற்றும் புதனின் பெயர்ச்சி நடக்க உள்ளதால் உருவாக போகும் ‘புதாதித்ய ராஜயோகம்’ உங்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரக்கூடும். நீங்கள் கையில் எடுத்த எந்த ஒரு வேலையும் விரைவாக முடிக்க முடியும். நீண்ட நாட்களாக நிலுவிலிருந்து பணிகள் முடிப்பீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.

இந்த மாதத்தில் பொறுமையுடன் செயல்படுவதும், முக்கியமான முடிவுகளை கவனமாக எடுப்பதும் உங்களுக்கு நன்மை தரும். முதலீடு தொடர்பான விஷயங்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். மேலும் சரியான நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். முடங்கிக் கிடந்த பணம் திரும்ப கிடைக்க பெறுவீர்கள்.

கன்னி ஆகஸ்ட் மாத ராசிபலன்

கன்னி ராசி நண்பர்களுக்கு உங்களுடைய லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் ‘கஜலட்சுமி யோகம்’ உருவாகும். மேலும், 12-ம் வீட்டில் ‘புதஆதித்ய ராஜயோகம்’ உருவாகக்கூடிய இந்த ஆகஸ்ட் மாதத்தில், நீங்கள் செய்யக்கூடிய தொழில் அல்லது வணிக ரீதியான விஷயங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப பொறுப்புகள் மற்றும் பணி தொடர்பான இலக்குகளை அடைவதில் முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

பணியிடத்தில் உங்கள் செயல் திறன் பாராட்டை பெற்று தரும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களுடைய உறவுகளில் வெளிப்படையை தன்மையை கடைப்பிடிக்கவும். பெரிய விஷயங்களை கூட மிக படுத்தாமல் அதை கவனித்து முடிக்கவும்.

விருச்சிக ஆகஸ்ட் மாத ராசிபலன்

விருச்சிக ராசி நண்பர்கள் ஆகஸ்ட் மாதத்தில் புதிய சாதனைகளை படைப்பார்கள். இந்த மாதத்தில் உங்களுடைய பாக்கிய ஸ்தனமான 9-ம் வீட்டில் ‘கஜலட்சுமி யோகம்’ உருவாகும். 10-ம் வீட்டில் ‘புதஆதித்ய ராஜயோகம்’ அமையும். கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் யோகங்கள் காரணமாக உங்களுடைய முயற்சிகள் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவீர்கள். நீங்கள் புதிய மனிதர்களுடன் பழகக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் முன்னெடுக்கும் புதிய திட்டங்கள் சாதகமானதாக அமையும். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவுடன் இருக்கும். இழந்த பணம் கூட உங்களுக்கு திரும்ப கிடைக்கலாம்.

Source link