அர்ஜென்டினா குறித்து சர்ச்சை பதிவு… 'லைக்' செய்த ரொனால்டோ? – இணையத்தில் பரபரப்பு

லிஸ்பன்,

2026 பிபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற பிபா உதவியதாக குற்றம் சாட்டிய இன்ஸ்டாகிராம் பதிவுக்கு, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ ‘லைக்’ செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மெஸ்சிக்கு உலகக் கோப்பை

பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினாவுக்கு போட்டிகளில் சாதகமான முடிவுகள் வழங்கப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பேசிய ஸ்பெயின் பத்திரிகையாளர் பிலார் ரோட்ரிக்ஸ் லொசாண்டோஸ், “பிபாவின் உதவியால்தான் அர்ஜென்டினா தொடரில் நீடிக்கிறது. லியோனல் மெஸ்சிக்கு உலகக்கோப்பையை வழங்கவே அவர்கள் விரும்புகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.

சர்ச்சை

இந்த பதிவுக்கு ரொனால்டோ ‘லைக்’ செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்களும் வைரலாகின.

நீக்கியிருக்கலாம்

இருப்பினும் ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அந்த பதிவுக்கு ‘லைக்’ செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, அவர் லைக்கை நீக்கியிருக்கலாம் அல்லது ஆரம்பத்திலிருந்தே இந்த தகவல் வதந்தியாக இருக்கலாம். இதுகுறித்து ரொனால்டோவோ அல்லது அவரது தரப்போ இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

Source link