விளையாட்டு வீரர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்: பிவி சிந்து

சென்னை,

விளையாட்டு வீரர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் கல்வியில் கவனம் செலுத்துவதை விட்டுவிடக்கூடாதுஎன ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

குர்கிராமில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பி.வி.சிந்து பேசுகையில்,

‘விளையாட்டு போட்டிகளில் நீண்ட காலம் தொடர முடியாது. ஒரு கட்டத் தில் ஓய்வு பெற்று தான் ஆக வேண்டும். ஆனால் கல்வி வாழ்க்கை முழு வதும் கைகொடுக்கும். எனவே வீரர், வீராங்கனைகள் விளையாட்டில் ஈடுபட் டாலும், கல்வியில் கவனம் செலுத்துவதை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது’ என்றார்.

Source link