ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கிய நேபாள அரசு

காத்மண்டு,

நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நாணயத்தில் செய்யப்பட்டுள்ள சிறிய வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈத்துள்ளது. இந்தியாவுடனான நல்லுறவுக்கான பெரிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

நாணயத்தில் வரைபடம்

நம் அண்டை நாடான நேபாளத்தில் இருந்த முந்தைய அரசுகள், எல்லை தொடர்பாக நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன.

குறிப்பாக, நம் நாட்டில் உள்ள லிபுலேக், காலா பானி, லிம்பியாதுரா ஆகியவற்றுக்கு சொந்தம் கொண்டாடின.

அந்தப் பகுதிகளுடன் கூடிய தேசிய வரைப்படத்தையும் அந்த நாடு, 2020 வெளியிட்டது. அந்த வரைபடத்துடன் கூடிய, நாணயங்களையும் வெளியிட்டது.

இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சி மற்றும் அரசியல் மாற்றங்கள் நேபாளத்தில் ஏற்பட்டது. கடந்த மார்ச்சில் நடந்த தேர்தலில், மாணவர்கள் ஆதரவு பெற்ற, ராப் பாடகர் பாலேந்திர ஷாவின், தேசிய சுதந்திர கட்சி அபார வெற்றி பெற்றது. அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போதைய புதிய அரசு, ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்து மட்டும் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க லோ க்யாகர் மடாலயத்தின் படத்தை சேர்த்துள்ளது.

நேரத்தில் இரண்டு ரூபாய் நாணயத்தில் இன்னமும் அந்த வரைபடம் இடம்பெற்றுள்ளது.

இது உள்நாட்டில் தேசியவாத எதிர்ப்புகளை சமாளிக்கவும், அதேவேளையில் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவும் நேபாள அரசு மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Source link