டெல்லியில் என்ன நடக்குது? ​16 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடிய மெட்ரோ நிர்வாகம் -தயார் நிலையில் துணை ராணுவம் – delhi metro closes 16 metro stations due to neet paper leak youngsters protest

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவருக்கு ஆதரவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இணைந்து மத்திய அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியது.போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர்.

டெல்லியில் உச்சக்கட்ட போராட்டம்

ஆனால் போராட்டகார்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுப்படி அறிவுறுத்தினர்.இருப்பினும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், ஜந்தர் மந்தரில் நிலைமை மோசமாவதை உணர்ந்த காவல்துறையினர் அவர்கள் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பல்வேறு இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்ததால் , போராட்டம் வலுப்பெற்றது. தொடர்ந்து நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஜலீல்!

இந்த நிலையில் டெல்லி பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் இளைஞர் காங்கிரஸ் நடத்துகின்ற போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் டெல்லி காவல் துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னாட் பிளேஸ், ஜந்தர் மந்தர், ரஃபி மார்க், பார்லமென்ட் ஸ்ட்ரீட் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய உணர்வுப்பூர்வமான பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய டெல்லி பகுதியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்களை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (DMRC) இன்று தற்காலிகமாக மூடியுள்ளது.

16 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடிய டெல்லி மெட்ரோ

மூடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பட்டியல்: லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) ராஜீவ் சௌக் (Rajiv Chowk) படேல் சௌக் (Patel Chowk) ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க் (Ramakrishna Ashram Marg) பாரகம்பா ரோடு (Barakhambha Road) சுப்ரீம் கோர்ட் (Supreme Court) சேவா தீர்த் (Seva Teerth) ஜனபத் (Janpath) மண்டி ஹவுஸ் (Mandi House) சென்ட்ரல் செக்ரடேரியட் (Central Secretariat) ஐ.டி.ஓ (ITO) டெல்லி கேட் (Delhi Gate) இந்திரபிரஸ்தா (Indraprastha) கான் மார்க்கெட் (Khan Market) ஜோர்பாக் (Jor Bagh) சிவாஜி ஸ்டேடியம் (Shivaji Stadium)

தயார் நிலையில் துணை ராணுவப் படை

முக்கிய சந்திப்புகள் மற்றும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவலர்களும் துணை ராணுவப் படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கலவர தடுப்புப் படைகள், விரைவுப் படைகள் மற்றும் கூடுதல் கையிருப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம், முக்கிய அரசு அலுவலகக் கட்டடங்கள் மற்றும் லட்சியன்ஸ் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகளில் தீவிர வாகன சோதனைகளும், நபர்களைச் சோதனையிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களால் ஏற்படும் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், அமைதியைப் பேணவும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் போராட்ட அமைப்பாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source link