Happy Family Habits,குடும்பத்தில் சண்டைகள் குறைந்து, ஒற்றுமை அதிகரிக்க உதவும் 6 வழிமுறைகள் – how to create a peaceful and happy home: 6 effective habits

சிலருடைய வீட்டில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் சண்டைகள் மற்றும் மனஸ்தாபங்கள் நிறைந்ததாக இருக்கும். இதனால் குடும்ப உறவுகள் இடையே இணக்க தன்மையில்லாமல் இருப்பார்கள். வாழ்க்கையில் இது போன்ற பிணக்குகளை ஏன் ஏற்படுகின்றன? அவற்றிற்கான காரணங்கள் என்ன என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பிரச்சனைகள் அல்லது முக்கிய பொறுப்புகளை முடிக்க வேண்டிய சூழல் நிறைந்திருக்கும். இருப்பினும் அதற்காக குடும்பத்தில் உங்கள் துணை அல்லது, குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை அல்லது கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்படுவது சரியான விஷயமாக கருதப்படுவதில்லை. ஒருவருடைய வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இல்லாவிட்டால், தேவையற்ற கருத்து வேறுபாடுகள் கூடிக் கொண்டே செல்லும். அதற்கான காரணம் என்ன? அவற்றை தீர்க்க சில எளிய பரிகாரங்கள் இங்கு பார்ப்போம்.

உலர்ந்த துளசி செடி

வீட்டின் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் அந்த வீட்டில் தேவையற்ற உனக்கு வாதங்களும் சண்டைகளுக்கும் வழிவகுக்கும். உங்களுடைய வீட்டில் துளசி செடி வளர்த்து வந்தால் அதை ஒருபோதும் வாட விட வேண்டாம். உலர்ந்த நிலையில் துளசி செடி வைத்திருப்பதால் வீட்டில் தேவைப்பட்ட எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, கஷ்டங்களும், வாக்குவாதங்களும் ஏற்படும் சூழல் உருவாகும். அதனால் துளசி செடியை பசுமையாக வைத்து பராமரிக்கவும். மேலும் தினமும் துளசி செடியை வழிபடுவது நன்மை தரும்.

உப்பு நீரால் தரையை துடைத்தல், உடைந்த சிலைகள்

உப்பு நீரால் தரையை துடைத்தல்
உங்களுடைய வீட்டில் உள்ள கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல் விலக, வாரத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது சிறிதளவு மஞ்சள் தூளும், உப்பு கலந்து நீரால் தரையே துடைப்பது அவசியம். இது உங்களுடைய வீட்டில் நேர்மறையான ஆற்றலையும் அமைதியான சூழலையும் கொண்டு வரும். மேலும் வீட்டில் கிருமிகளும் அழியும்.
உடைந்த சிலைகள்
உங்கள் வீட்டில் எந்த பகுதியில் உடைந்த சிலைகளை வைத்திருக்கக் கூடாது. வீட்டில் உடைந்த சிலைகளை வைத்திருப்பதால், நேர்மை ஆற்றலை விட எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக தரும் நினைவே உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டும் எனில், அப்பொழுது இந்த சிலைகளை உடனடியாக அகற்றவும்.

சூரிய வழிபாடு, கங்கை நீர் தெளிக்கவும்

சூரிய வழிபாடு
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும் குளித்துவிட்டு சூரியனை வழிபாடு செய்வதும் உங்களுடைய ஜாதகத்தில் சூரியனுடைய பலத்தை நடிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டின் சூழலும் நேர்மறை ஆற்றலால் நிரம்பி இருக்கும்.
கங்கை நீர் தெளிக்கவும்
​உங்களுடைய வீட்டில் மங்கலம் நிறையவும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கவும், வீடு முழுவதும் கங்கை நீரை தெளிக்கவும்.

உடைந்த கண்ணாடி அகற்றவும்

வீட்டில் சரியான இடத்தில் கண்ணாடி வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது வீட்டினுடைய அழகையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும்.. அதே சமயம் உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருப்பது, வாஸ்து சாஸ்திரத்தின்படி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்களுடைய உடைந்த கண்ணாடியை உடனடியாக வீட்டில் இருந்து அகற்றுவது நல்லது. இது தேவையற்ற கருத்து வேறுபாடுகளையும் , உறவுகள் இடையே மன வருத்தத்தை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, தொடர்புடைய துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.

Source link