சசிகலாவின் வழக்கறிஞர்.. த.வெ.க-வில் இராஜா செந்தூர் பாண்டியன் – பின்னணி என்ன ? – sasikala former lawyer joins raja senthoor pandian joins tvk

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.இராஜா செந்தூர் பாண்டியன் , தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.நிர்மல்குமார் முன்னிலையில், தன்னை த.வெ.க-வில் இன்று இணைத்துக்கொண்டார்.

கிரிமினல் வழக்குகளில் சுமார் 28 வருடங்களுக்கு மேல் ஆஜராகி, சிறந்த நிபுணத்துவம் பெற்ற திரு.இராஜா செந்தூர் பாண்டியன் ,மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் வழக்கறிஞராக அறியப்பட்டவர். பல தரப்பட்ட அரசியல் தொடர்பான வழக்குகளை நடத்தியவர்.

தமிழகத்தில் 2006-2011 காலக்கட்டத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த அவலங்களை வழக்குகளாகவும் பத்திரிக்கை கட்டுரைகள் வாயிலாகவும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர்.

திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஜலீல்!

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் வழக்கறிஞராக ஆஜராகி, நுணுக்கமான பல்வேறு வாத பிரதிவாதங்களை முன்வைத்தவர். அரசியல் பின்புலம் கொண்ட பெரும் பிரபலங்களை குறுக்கு விசாரணை செய்தவர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்க்காக வழக்கறிஞராகவும் செயல்பட்டவர் திரு.இராஜா செந்தூர் பாண்டியன் . அக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கும், பொதுச்சின்னம் கிடைப்பதற்கும் உறுதுணையாக விளங்கியவர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், திரு.இராஜா செந்தூர் பாண்டியனின் சீறிய முயற்சியால் அ.ம.மு.க-வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்தது.

நீதிமன்றத்தில், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நடுங்கும் அளவுக்கு வாதம் புரியும் திறம்படைத்த வழக்கறிஞர் திரு.ந. இராஜா செந்தூர் பாண்டியன் இன்று தன்னை த.வெ.க-வில் இணைத்துக் கொண்டுள்ளார்.

Source link