ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பாலிவுட் நடிகை நோரா பதேஹி ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியானது.
இவர்களோடு முதல் பாகத்தில் நடித்த மிர்னா மேனனும் நடித்து வருகிறார். அவர் தற்போது இப்படம் குறித்து ஒரு கல்லூரி நிகழ்வில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் ‘ஜெயிலர்’ முதல் பாகம் நடிக்கும் போது வேறு ஒரு படத்திற்காக புரொமோஷன் சென்றிருந்தேன். அப்போது ஒரு பேட்டியில் ‘ஜெயிலர்’ படம் எப்படி வருகிறது எனக் கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன், இண்டர்வெல் காட்சி இப்போது தான் படமாக்கி முடித்தோம், தமிழ் சினிமாவிலேயே, இப்படி ஒரு இண்டர்வெல் பிளாக் இதுவரை வந்ததில்லை, இனிமேல் வருமா எனவும் தெரியவில்லை எனக் கூறினேன். ஆனால் ஜெயிலர் 2 பற்றி சொல்ல வேண்டுமானால், முதல் பார்ட் இண்டர்வெல் பிளாக்கே அப்படி இருந்தது என்றால் இந்த பாகம் எப்படி இருக்கும் என நீங்களே யோசித்து பாருங்கள்.
நான் 25 வருஷம் முன்பு படையப்பா படம் பார்த்தேன். அதில் ரம்யா கிருஷ்ணன் ரஜினி சாரை பார்த்து வயசானாலும் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகலனு சொல்வார்கள். இப்போ ரஜினி சாரை பார்க்கும் போது அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது. அதே போல ஸ்டைல், எனர்ஜியுடன் இருந்தார். அதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதர். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.” என்றார்.
