CSK – உர்வில் படேலை ஒரு வருடம் கடனாக கொடுங்க: கோரிக்கை வைத்த ஐபிஎல் அணி: முழு விபரம் இதோ – csk to give urvil patel to lsg team for just one year trading deal

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஸ்டார் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே போன்றவர்களின் பெயர்கள் டிரேடிங்கில் அடிபடுவதால், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்புகொண்ட லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம், உர்வில் படேலை ஒரு வருடத்திற்கு கடனாக கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ன காரணம்? ஐபிஎல் அணிகளில், மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அணி என்றால் அது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிதான். தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பிராண்ட் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இதனால்தான், சிஎஸ்கேவிடம் இருந்து உர்வில் படேலை ஒரு வருடத்திற்கு கடனாக கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாற்றாக, அணிக்கு முகமது ஷமியை விட்டுக்கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும், ரிஷப் பந்தை டிரேடிங் செய்து, மாற்றாக தரமான வீரரை பெறும் முடிவிலும் லக்னோ அணி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கேவுக்கு லாபம் தான்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஆயுஷ் மாத்ரே திரும்பிவிட்டால், உர்வில் படேல் பெஞ்சில் அமர வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படி, பெஞ்சில் அமரும் வீரரை, ஒரு வருடம் மட்டும் கடனாக கொடுத்தால், டிரேடிங் கட்டணமாக 30 கோடி வரை பெற முடியும். இது சிஎஸ்கேவுக்கு லாபம்தான். மேலும், லக்னோ அணிக்கும், கம்பேக் கொடுக்க தரமான வீரர்கள் தேவை என்பதால், லக்னோ அணிக்கும் இது லாபம் தான்.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இதுகுறித்து என்ன முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹர்திக் பாண்டியா டிரேடிங் டீலையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஆயுஷ் மாத்ரேவை கேட்கும் நிலையில், ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்காமல், ஹர்திக் பாண்டியாவை வாங்க என்னென்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

என்ன காரணம்? ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது 32 வயதாகிவிட்டது. மேலும், அவர் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஆயுஷ் மாத்ரே போன்ற முக்கியமான வீரர்களை விட்டுக்கொடுக்க கூடாது என சிஎஸ்கே அணி நிர்வாகத்தின், சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனால்தான், டிரேடிங் டீலின் பேச்சு வார்த்தை இழுபறியில் இருக்கிறது.

மேலும், குஜராத் டைடன்ஸ் அணியிடன் இருந்து சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரையும் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவர்களும், உர்வில் படேலை கேட்டு நிற்பதால், பேச்சு வார்த்தையில் மந்தமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது குறித்தும், சிஎஸ்கே தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Source link